Header Ads



தாயை மரணத்திலிருந்து காப்பாற்றிய சிறுவன் - உதவியது ஆப்பிள் Siri..!

லண்டனில் உள்ள கென்லே பகுதியில் வசிக்கும் நான்கு வயது சிறுவன் ரோமன். அவன் செய்த விஷயம் அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது. மரணத்தின் பிடியில் இருந்த தனது தாயை  ஐபோனின் வாய்ஸ் அசிஸ்டென்ட்டான சிரியின் உதவியுடன் காப்பாற்றி அனைவரையும் நெகிழ வைத்துள்ளான் ரோமன். 

நான்கு வயது சிறுவன் ரோமன் தனது தாய் மயங்கிய நிலையில் இருப்பதை அறிந்து எழுப்பியுள்ளான். தனது தாய் எழுந்திருக்காமல் இருந்ததையடுத்து பதறிய ரோமன். தனது தாயின் ஐபோனை எடுத்து அவரது கட்டைவிரலை வைத்து சிரியை ஆன் செய்துளான். அதன் மூலம் தனது தாய் மயங்கிய நிலையில் இருப்பதை தெரிவிக்க சிரி ஆம்புலன்ஸுக்கான எண்ணான 999- ஐ அழைத்துள்ளது. அதில் போலிஸ் உங்களது அவசர தேவை என்ன என கேட்க? 

''நான் ரோமன், என் தாய் வீட்டில் மயங்கிய நிலையில் இருக்கிறார். எனக்கு ஒரு உதவி செய்வீர்களா? அவரை வீட்டில் வந்து அழைத்து செல்ல முடியுமா என கேட்டுள்ளான். அவர் இறந்துவிட்டார் என நினைக்கிறேன் என்றும் கூறியுள்ளான்.  மீண்டும் 999 எண்ணில் தொடர்பில் இருந்தவர்கள் தெளிவாக ரோமனிடம் கேட்க அவர் கண்களை மூடிய நிலையில் நீண்ட நேரமாக இருக்கிறார். அவர் மூச்சுவிடவில்லை என்று மழலை மாறாமல் கூறியுள்ளான். 

நிலையை புரிந்து கொண்ட அவசர அழைப்பில் இருந்தவர்கள் ரோமனிடம் வீட்டு முகவரியை கேட்டுள்ளார்கள். அவனும் முகவரியை அளிக்க 13 நிமிடத்தில் ஆம்புலன்ஸ் வந்து மயக்கத்தில் இருந்த ரோமனின் தாயை காப்பாற்றியுள்ளது. அவர் சரியான நேரத்தில் அளிக்கப்பட்ட சிகிச்சையால் உயிர்பிழைத்துள்ளார். இதற்கு காரணம் ரோமன் சரியான நேரத்தில் சிரியை கையாண்டு 999க்கு அழைத்தது தான் என்று அப்பகுதியில் உள்ளவர்கள் நெகிழ்ந்துள்ளனர். 

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள போலீஸ் அதிகாரி ''குழந்தைகள் இன்றைய தொழில்நுட்பத்தை நன்கு அறிந்துள்ளனர். அவசர நேரங்களில் சமயோஜிதமாக யோசித்து சிரியை அழைத்து தனது தாயை காப்பாற்றியிருப்பது உண்மையாலுமே பெருமைப்பட வேண்டிய விஷயம் என்று கூறியுள்ளார்.

சிரி மூலம் இதேபோல் நிறைய பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர். தனது ஒரு வயது குழந்தை மூச்சுவிடமுடியாமல் தவித்த போது சிரி மூலம் ஆம்புலன்ஸை அழைத்து தனது மகளை தாய் ஒருவர் காப்பாற்றியுள்ளார். ஒருவரது ட்ரக் கவிழ்ந்து அதிலிருந்து தப்பிக்க முடியாமல் இருந்த போதும் சிரி உதவியால் உயிர்பிழைத்துள்ளார். 

2 comments:

  1. Story was ok but last except the paragraph.
    A mother saved his child by using Siri to calll 999? Are you kidding ?
    Why on earth a mother should use Siri to call 999 ?

    ReplyDelete
  2. Correction read "except last paragraph "

    ReplyDelete

Powered by Blogger.