Header Ads



'முஸ்லிம் விரோத கருத்துக்களுக்கு, முஸ்லிம்கள் சமூகப் மயப்படாமையே காரணம்'

-JM.HAFEEZ-

முஸ்லிம் விரோத கருத்துக்கள் நாட்டில் ஏற்படக்காரணம் இலங்கை வாழ் முஸ்லிம்கள் சில விடயங்களில் சமூக மயப்படுத்தப்படாததாகும். இதன் விளைவே  இனக்குரோதக் கருத்துக்கள் எம்மைநோக்கி வந்ததே தவிற அவர்களில் தவறில்லை என அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் ஒற்றுமைக்கும்  ஒருங்கிணைப்பிற்குமான குழுவின் தலைவர் அஷ்ஷேக் அப்துர்றஹ்மான் (ரசாதி) தெரிவித்தார். (25.3.2017 மாலை)

ஜம்மியத்துல் உலமா சபையின் மடவளை பஸார் கிளை ஒழுங்குசெய்த கூட்டம் ஒன்றிலே அவர் இனைத் தெரிவித்தார். பொது பலசேனாவினால் கேட்கப்பட்ட சில அபிப்பிராய பேத வினாக்களுக்கு சாத்வீக ரீதியில் புத்தக வடிவில் வெயிடப்பட்ட ‘சமாஜ சங்வாத’ (சமூக கருத்தாடல்) என்ற ஆறு சிங்கள மற்றும் தமிழ் நூல்களின் அறிமுக விழாவிலே அவர் இனைத் தெரிவித்தார். அவர் அதில் மேலும் தெரிவித்ததாவது-

பொது பலசேனாவினர் ஒரு கூட்டம் நடத்தி அதில் திருக்குர்ஆன் விளக்கம் நடத்தினர். அதாவது சிதைந்த சடுதியான மாற்றங்களுக்குட்பட்ட விளக்கங்ளை (விகாரமான வினக்கங்கள்) வழங்கினர். இது முஸ்லிம்கள் பற்றி தப்பபிப்பிரயத்தை ஏற்படுத்தக் காரணமாக இருந்தது. அதனுடன் தொடர்புடைய கருத்து மோதல்கள் உருவானபோது எம்மைநோக்கி அவர்கள் சில வினாக்ளை முன்வைத்தனர். அதில் ஒன்றுதான்  உங்கள் மகிச்சிக்காக எப்படி நீங்கள் மிருகங்ளைக் கொள்ள முடியும் என்பதாகும்.

இதற்கு ஆதார பூர்வமாக பின்வரும் கருத்துக்ளை எம்மால் தொகுத்து வழங்க முடிந்தது. 2013ம் ஆண்டு உணவு மற்றும் விவசாய நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின் படி ஒரு வருடத்திற்கு ஒருவரால் 19 கிலோ மீன் இலங்கையில் நுகரப்படுகிறது. அப்படியாயின் இரண்டு கோடி மக்களுக்கும் 38 கோடி கிலோ மீன் தேவை. இலங்கையில் அதனைப் பயன் படுத்தாவிட்டால் வருடம் 38 கோடி கிலோ மீனுக்கம் என்ன நடக்கும்.

அதே விதம் 43 கிலோ  இறைச்சி தேவைப்படுகிறது. இதுவும் வருடம் 307 பில்லியன் கிலோவாக மாறிறவிடும். அதேநேரம் அரசினால் அனுமதி வழங்கப்பட்ட மாடுவெட்டும் இடங்கள் நாட்டில் 300 இடங்கள் உண்டு.அதில்மொத்தம் 5000 மாடுகள் வரைவெட்டப்படுகின்றன. அதாவது வருடம் சுமார் 18 இலட்சம் மாடுகள் வெட்டப்படுகின்றன. ஆறு வருடங்களுக்கு மாடுவெட்டா விட்டால் இலங்கையின் மொத்த சனத்தொகையான 2 கோடியை மாடுகளின் எண்ணிக்க தாண்டி விடும். அப்படியாயின் என்செய்வது?

இராணுவம் முப்டைபோன்றவற்றில் உள்ளவர்களுக்கு போசாக்குணவு தேவை.வெறும் காய்கறிகளால் அதனை ஈடுசெய்ய முடியாது. அப்படயாயின் அவர்களின் தேவையை பூர்திசெய்வது எப்படி?

மிருகக் காட்ச்சிசாலைகளில் உள்ள சிங்கம், புலி கரடி போன்ற வற்றிற்கு எப்படி உணவளிப்பது. இவை மனிதனையல்லாவா பிடித்துத் தின்னும். அது மட்டுமல்ல இலங்கையின் பாரம்பரிய கலாச்சாரம் எல்லாவற்றிலும் மேள தாளம் உண்டு. மிருகங்களின்தோல் இல்லாமல் எப்படி மேளதாளங்ளைச் செய்வது?.பெரஹரா ஊர்வலம்போவது எப்படி.

இயற்கையாகவே மனிதனுக்கு வேட்டைப் பல் இருக்கிறது. இது புல்தைதின்னும் ஆடு மாடுகளுக்கு இல்லை. இது பற்றி சிந்த்தித்தால் போதுமானது. துருவங்களில் உள்ள எஸ்கிமோவர்கள் உடலை உஷ்ணப்படுத்தும் உணவு மற்றும் தோல் உடைகளுக்கு என்ன செய்வது. இஸ்லாம் எஸ்கிமோவருக்கும் பொதுவானதே.  இப்படி அடுக்கிக் கொண்டுபோகலாம் எனறார்..

இதே விதம் அடுத்த புத்தகமான சனத்தொகைப்பெருக்கம் தொடர்பாகவும் நீண்ட விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். குறிப்பாக நாட்டில் ஒரு இலட்சத்து நாற்பதாயிரம் பேர் குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர். ஒருநளைக்கு 800 முதல் 1000 கரக்லைப்புக்கள் நடக்கின்றன. உயிருடன் கடைத்த கழநதளை வீசி எரிகின்றனர். அல்லதுகலைசெய்கின்றனர். சிங்களப் பெண்கள் திருமணம் செய்யம் வயதை பிற்போடு கின்றனர். அதிகமானவர்கள் அரசதொழில் பார்ப்பதால் குழந்தைகள் சுமையாகின்றன.

நாட்டில் ஒருநாளைக்கு 1200 குழநதைகள் பிறக்கும்போபது 1000 பேர் பல்வேறு காரணங்களாலும் மரணிக்கின்றனர்.  அதில் 600 பேர் எது விதநோயுமின்றி மரணிக்கின்றனர். 360 பேர் போதை காரணமாக மரணிக்கின்றளர்.  அதிகமான குடும்பங்கள் வெளிநாட்டு வேலை வாய்ப்பு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர். கல்வி கற்பதுவும் பரீட்சைக்கு ஆய்த்மாவதும் பிள்ளைப் பிறப்பை பிற்படுத்துகிறது. இப்படி பல்வேறு காரணங்கள் பற்றி அதில் குறிப்பிடப் பட்டுள்ளதாகவும் கூறினார்.

மத்ரசாக்கள் பள்ளிகள் பற்றிய விடயத்திலும் பள்ளிகளில் ஐவே​ளைதொழுகை, திருமணவைபவம், ஜனாசா, மத்ரசாக்கள்,போன்றன நடத்தப்படுவது பற்றியும்  நாட்ட்டில் புனித பிதேசமாக்கப்பட்ட பகுதிகளில் 45 சாரயத் தவரணைகள் இருப்பது குறித்துப் பேசப்படாமல் இருப்பது பற்றியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

​படையெடுப்பு மூலம் இஸ்லாம் ஆசிய நாடுகளில் பரவவில்லை என்பதற்கு மாலைத் தீவையும் இலங்கையில் பௌத்தம் பரவிய வரலாற்றையும் ஒப்பிடப்பட்டுள்ளது.

ஜிஹாத் பற்றி தவறான கருத்துப்பிரயோகம் பற்றியும் தெளிவு படுத்ப்பட்டுள்ளது. கலாசார உடை பற்றி விடயங்களும் தெளிவு படுத்தப்பட்டுள்ளதாகக் கூறினார்.

No comments

Powered by Blogger.