Header Ads



பாராளுமன்றத்தில் அமளி, தூக்கப்பட்டார் தினேஷ்

பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டு 3 ஆவது தடவையாக மீண்டும் கூடிய நிலையில், தினேஷ் குணவர்தனவை வெளியேற்றுவதற்காக வாக்கெடுப்பு நடைபெற்றது.

இதில் தினேஷ் குணவர்தனவை வெளியேற்றுவதற்கு ஆதரவாக அதிகளவு வாக்குகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இதனடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன ஒரு வாரத்திற்கு பாராளுமன்ற செயற்பாடுகளில் ஈடுபடத்தடை விதித்து சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.

பாராளுமன்றில் இடம்பெற்ற வாய்மூலமான வாக்கெடுப்பின்போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதில் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் வருகைத்தராத நிலையில், பலர் தினேஸ் குணவர்தனவிற்கு எதிராக வாக்களித்தனர்.

விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியின் கட்சியானது, தனிக் கட்சியல்ல என்று சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்து விமலுடைய வேண்டுகோளையும் நிராகரித்திருந்தார்.

இதனால் கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களால், நாடாளுமன்றில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதுடன், தினேஷ் குணவர்தனவை வெளியேறுமாறு சபாநாயகர் தெரிவித்தார்.

ஆனால் அவர் வெளியேற மறுத்த நிலையில் சபை ஒத்திவைக்கப்பட்டதுடன், பொலிஸ் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளும் பாராளுமன்றத்திற்குள் நுழைந்தனர்.

எனினும் அதிகாரிகள் தினேஷ் குணவர்தனவை நெருங்காமல் கூட்டு எதிர்க்கட்சியினர் அவரை சூழ்ந்து கொண்டதுடன் சபை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.

இதன்போதே தினேஷ் குணவர்தனவை வெளியேற்றுவதற்காக பாராளுமன்றில் வாக்கெடுப்பு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.


No comments

Powered by Blogger.