Header Ads



மன்னர் சல்மானின் வருகையால், திறந்த மார்பு சிலைகள் மூடப்பட்டன


சவுதி அரேபியா மன்னர் வருவதால் மேலாடை இல்லாத பெண் சிலைகளை மறைக்க முடியாது என பாலித் தீவு மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

சவுதி அரேபிய மன்னர் சல்மான் இந்தோனேசியா நாட்டில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக அங்குள்ள பாலித் தீவுக்கு சென்று ஓய்வு எடுக்கிறார்.

2 நாட்களுக்கு முன்பு சவுதி அரேபிய மன்னரும், இந்தோனேசிய அதிபர் ஜோகோ விதோதாவும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

இந்த சந்திப்பு ஜகர்தா அருகே உள்ள போகோர் அரண்மனையில் நடைபெற்றது. இந்த அரண்மனையில் பழங்கால சிலைகள் ஏராளமாக இருந்தன.

அதில், பெண்கள் திறந்த மார்புடன் உள்ள சிலைகளும் இருந்தன. அரண்மனைக்கு சவுதி அரேபிய மன்னர் வந்ததால் பெண்கள் அரை நிர்வாணமாக இருந்த சிலைகள் துணியால் மூடப்பட்டன.

தற்போது பாலித் தீவுக்கும் மன்னர் சல்மான் செல்கிறார். பாலித்தீவில் பல்லாயிரக்கணக்கான இந்து கோவில்கள் உள்ளன. அங்குள்ள கோவில்களிலும் மற்ற இடங்களிலும் மேலாடை இல்லாமல் பெண் சிலைகள் உள்ளன.

இந்த சிலைகளை மூடி மறைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. ஆனால், இதற்கு பாலித் தீவு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அரசின் செய்தி தொடர்பாளர் தேவ மகேந்திரா கூறும்போது, ‘ஆதிகாலத்தில் இந்தோனேசிய பெண்கள் மேலாடை அணியாமல் இருந்துள்ளனர்.

எனவே, அந்த காலத்தில் செய்த சிலைகள் மேலாடை இல்லாமல் இருக்கின்றன. சவுதி அரேபிய மன்னர் வருகிறார் என்பதற்காக அவற்றை மூடி மறைக்க முடியாது. தினமும் லட்சக்கணக்கான வெளிநாட்டு மக்கள் இங்கு சுற்றுலா வருகிறார்கள். அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

மேலாடை அணியாத பெண்கள் சிலை என்பது எங்களுடைய கலாச்சாரத்தில் ஒன்று அதை யாருக்காகவும் மூடி மறைக்க முடியாது’ என்று கூறினார்.

இதற்கிடையே சவுதி மன்னர் பயணத்தின்போது அரை நிர்வாண சிலைகள் மறைக்கப்பட மாட்டாது என பாலி கவர்னரும் தெரிவித்திருப்பதாக உள்ளூர் இணையதளத்தில் செய்தி வெளியாகி உள்ளது.

6 comments:

  1. கெடுகுடி சொல் கேளாது என்பது பழமொழி,இறைவனை யாரன்று தெரியாமலும்,தனக்குள்ளே சிந்தித்து வெட்கப்படாதவனும் ஒருக்காலும் திருந்தமாட்டான்,மன்னர் தலையை குனிந்து பூமியை பார்த்தபடி போகலாம்.உமர் (ரழி)அவர்கள் பைத்துல் முகத்தஸை பெற்றுக்கொண்ட சந்தர்ப்பத்தில் நடந்த முறை மன்னருக்கு நன்கு தெரியும்.

    ReplyDelete
  2. கெடுகுடி சொல் கேளாது என்பது பழமொழி,இறைவனை யாரன்று தெரியாமலும்,தனக்குள்ளே சிந்தித்து வெட்கப்படாதவனும் ஒருக்காலும் திருந்தமாட்டான்,மன்னர் தலையை குனிந்து பூமியை பார்த்தபடி போகலாம்.உமர் (ரழி)அவர்கள் பைத்துல் முகத்தஸை பெற்றுக்கொண்ட சந்தர்ப்பத்தில் நடந்த முறை மன்னருக்கு நன்கு தெரியும்.

    ReplyDelete
  3. ஆதிகாலத்தில் மனிதன் ஆடை இன்றியெ இருந்துள்ளான் அது என்ன பெண்களை மட்டும் இவ்வாறு

    ReplyDelete
  4. so they are keeping those statues for visitors ha..

    ReplyDelete
  5. மூட நம்பிக்கையின் மூத்த குடி மக்கள் இந்த ஹிந்து குடி மக்கள். என்ன கண்ராவி இது? அரை நிர்வாணமெல்லாம் கலாச்சாரமா ச்சீ ச்சீ

    ReplyDelete
  6. இவர்க்கு ஓய்வு எடுக்கறது க்கு வேறு இடம் கிடைக்கலையா

    ReplyDelete

Powered by Blogger.