Header Ads



முஸ்லிம் சட்டத்தில், மாற்றங்கள் தேவையில்லை - ரிஸ்விமுப்தி திட்டவட்டமாக அறிவிப்பு

-ARA.Fareel-

முஸ்லிம் தனியார் சட்டத்தில் மாற்றங்கள் தேவையில்லை முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்டம் அந்தக் காலத்தில் சரி­யா­கவே எழு­தப்­பட்­டுள்­ளது. 

அந்தச் சட்ட வரைபு சிறப்­பாக வடி­வ­மைக்­கப்­பட்­டுள்­ளது. இந்தச் சட்­டத்தில் மாற்­றங்கள் தேவை­யில்லை. சட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்தும் விட­யத்­திலே கட்­டுப்­பா­டுகள் கொண்டு வரப்­பட வேண்டும் என அகில இலங்கை ஜம்­இய்யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். ரிஸ்வி முப்தி தெரி­வித்தார்.

முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­டத்தில் திருத்­தங்­களை சிபா­ர்சு செய்­வ­தற்­காக நிய­மிக்­கப்­பட்­டுள்ள முன்னாள் உயர் நீதி­மன்ற நீதி­ய­ரசர் சலீம் மர்­சூபின் தலை­மை­யி­லான குழு, அகில இலங்கை ஜம்­இய்யத்துல் உலமா சபையின் பத்வா குழு­வினைச் சந்­தித்து இறு­தி­யாகக் கலந்­து­ரை­யா­ட­வுள்­ளமை தொடர்பில் வின­வி­ய­போதே அவர் இவ்­வாறு கூறினார்.

குழுவில் அகில இலங்கை ஜம்­இய்யத்துல் உலமா சபையின் தலை­வரும் பொதுச் செய­லா­ளரும் அங்கம் வகிக்­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும். கடந்த 19 ஆம் திகதி இடம்­பெற்ற குழுவின் அமர்­விலும் அவர்கள் கலந்து கொண்­டி­ருந்­தனர்.

அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில்;

'அகில இலங்கை ஜம்­இய்யத்துல் உலமா சபை தெளி­வான நிலைப்­பாட்­டி­லேயே இருக்­கி­றது. ஷரீஆ சட்டம் மனி­தர்­க­ளுக்குத் தீங்­கி­ழைக்கக்கூடிய சட்­ட­மல்ல. ஆனால் சட்டம் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­படும்போது சில சிக்­கல்கள் ஏற்­ப­டலாம். அவ்­வா­றான சிக்­கல்­க­ளுக்குத் தீர்­வு­க­ளா­கவே திருத்­தங்கள் அமைய வேண்டும்.

ஷரீஆ சட்டம், முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்டம் என்­ப­ன­வற்றின் அடிப்­ப­டை­களை அநேகர் அறி­யா­துள்­ளனர். மக்­களே தெளி­வில்­லாமல் இருக்­கி­றார்கள். எனவே இதுபற்றி மக்கள் தெளிவூட்­டப்­பட வேண்டும்.

முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­டத்தை அமுல்­ப­டுத்தும் காதி நீதி­மன்­றங்கள் சில சவால்­களை எதிர்­கொள்­கின்­றன. இது கவ­னத்திற் கொள்­ளப்­பட வேண்டும்.

சட்­டத்தில் திருத்­தங்­களை சிபா­ர்சு செய்­வ­தற்கு நிய­மிக்­கப்­பட்­டுள்ள குழு உலமா சபையின் பத்வா குழு­வினைச் சந்­தித்து இறு­தி­யாக ஆலோ­ச­னை­களைப் பெற்றுக் கொள்­வ­தற்கு தீர்­மா­னித்­துள்­ளமை வரவேற்கத்தக்கதாகும்.

முஸ்லிம் சமூகத்துக்காக எமது முன்னோர்கள் வடிவமைத்துத் தந்துள்ள இச்சட்டத்தையும் காதி நீதிமன்ற முறைமையையும் பாதுகாத்துக் கொள்வது எமது கடமையாகும்' என்றார்.

7 comments:

  1. We don't have to stick to the MMDA which our ancestors drafted. If it is proven to be working against the best interest of the community, those should be rewritten.

    I have seen how bad the women are treated and unjustly divorced because of the ultimate powers vested with the qazis.

    Also our ulema should refrain from making comments like, these man made laws as divine revelations. MMDA is man made and has many shortcomings. If we don't correct them someone else will.

    Then there is no point of protesting.

    ReplyDelete
  2. So you must introduce implementing regulations on this MMDA law. It is a must. Is there any qualification or placement test for the Qazis in Sri Lanka. Anyone who has some political influence and very little Islamic knowledge can become a Qazi in Sri Lanka. There should be a central executive committee (a qualified one) to examine the judgements of the Qazis if the parties involved are not happy about their case.

    ReplyDelete
  3. The ACJU leadership’s involvement in politics and hobknobbing with politicians known for corruption and crime, shady businessmen and wheeler dealers has been an issue of serious concern for sometimes among Muslims who are deeply concerned about the plight of the community is TRUE. "THE MUSLIM VOICE" has also been raising our concerns concerning this in many of our comments. The ACJU willingly or unwillingly allows itself to be manipulated by the above Muslim politicians and used as a front for Muslim as well as non-Muslim politicians who seek to achieve their own ends through the ACJU. These Muslim politicians are today suspected of large scale corruption and swindling of State funds, both during the Mahinda Rajapaksa government and now in the Yahapalana government. The ACJU also received a large block of land in Colombo 12 from former President Mahinda Rajapaksa when they were politically flirting with the UPFA/SLFP government and no one knows what happened to this block of state land that the ACJU got from Mahinda. Fingers are also pointed at the ACJU regarding their "Halal Certificate" earnings and the way it is now being manipulated under a so-called "Non-Profit Company". It is time-up that The ACJU should declare it's account, admit it received a lot of funding during the Geneva visits to campaign for Mahinda and reveal the assets of Mufti Rizvi and his high-profile life style and maintenance of expensive luxury vehicles, being a ordinary "MOULAVI/Mufthi". Very soon, the privileges of the RIGHT TO INFORMATION BILL/ACT may induce Anti-Muslim Buddhist clergy and Extreme Nationalist elements, to use the law to probe into the earnings of the ACJU and make them become “TRANSPARENT” in their dealings. RISVI MUFTI HAS FAILED TO ANSWER TO THE QUESTION RAISED ABOUT THE 12 PERCHES LAND THAT WAS GIVEN TO THE ACJU BY MAHINDA RAJAPAKSA DURING HIS REGIME. THIS ITSELF SHOWS WHAT A CHARACTER RIZVI MUFTI IS AND THE ACJU IS ALL ABOUT. During my visit to Sri Lanka last week, I had the opportunity to meet Former President Mahinda Rajapaksa for a chat. I asked Mahinda to confirm details of this land gift by him/his regime to Rizvi Mufthi and the ACJU, in the presence of Former Minister G.L. Peries. Mahinda Rajapaksa CONFIRMED it and said what meant - "The Muslims have to learn more about these guys as they are NOT only hoodwinking us, but also the poor Muslim community". Noor Nizam. Peace and Political Activist, Political Communication Researcher, SLFP Stalwart and Convener - The Muslim Voice.

    ReplyDelete
  4. மாற்றங்கள் தேவையில்லை என்னும் கோஷம் முஸ்லிம்களை கற்காலத்தில் வைத்திருக்கவும், பிற்போக்கு சமூகமாக மாற்றவுமே உதவும். தலைமைகள் இதனை உணர வேண்டும்.

    மாற்றம் ஒன்றே மாற்றமில்லாமல் தொடரும் ஒரே விடயம்.

    ReplyDelete
  5. Most of the time women don't get justify in this system. I don't trust this system at all in Srilanka. My friend get a just call from Qazi just to come and see him for divorce. there is no official letter.Women don't even know what's going on. She said they call her father and gave divorce(Thalak) this is so funny. Need a big implement for this system

    ReplyDelete
  6. என் பாசமிகு அன்பு இஸ்லாமிய நெஞ்சங்களே! இங்கு நாம் எல்லோரும் புரிய வேண்டியது என்னவென்றால், இஸ்லாமிய சட்டத்தில் எந்த ஒரு தவறும் கிடையாது மாறாக அதை நடைமுறைப்படுத்தும் காழி நீதிபதிகளின் தீர்ப்பில்தான் தவறுகள் உள்ளன.
    இதை சரிபடுத்த வேண்டுமென்றால், நன்றாக மார்க்கம் படித்த, அல்லாஹ்வை பயந்த, நல்ல அனுபவமுள்ள காழி நீதிபதிகள் உருவாக்கப்ட வேண்டும், இதுதான் உண்மை.

    ReplyDelete
  7. தற்போதைய திருமணச் சட்டம் பெண்களுக்கே அதிக வலுச் சேர்த்திருக்கிறது என்பதை அதனை ஆழமாக நோக்குபவர்கள் புரிந்து கொள்ளலாம். இலங்கை முஸ்லிம் திருமணச்சட்டத்தில் மாற்றங்கள் வேண்டும் என கோசம் எழுப்பும் எம் பெண்கள் யாரால்? எந்த மதத்தினரால் இயக்கப்படுகிறார்கள்? அதற்கான உதவிகள் எந்த நாட்டிலிருந்து வருகின்றன? போன்ற விடயங்களை இங்கு வெளிப்படையாக கூற முடியாது.

    தற்போதைய திருமணச்சட்டத்தில், பெண்கள் திருமணம் செய்த பின்னரும் கூட அவள் கணவனால் ஒழுங்காக பராமரிக்கப் படுகிறாளா? என்பதை கண்கானிக்கும் வாய்ப்பை பெண்ணின் 'வலி' க்கு வழங்குவதன் மூலம் பெண்ணின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. இந்த பொறிமுறையை உடைப்பதன் மூலம் திருமணத்தின் பின் பெண், கணவனால் துன்புறுத்தப்பட்டாலும் கேள்விகேட்க யாருக்கும் உரிமை இல்லாத நிலைமையை உருவாக்கிவிடலாம்.தற்போது திருத்தம் வேண்டி கோசமிடுபவர்களின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்று இந்த நிலைமையை இலகுவாக உருவாக்கி விடுகிறது.

    காதி நீதிபதி தெரிவுப் பொறிமுறையில் மாற்றம் தேவைதான். ஆனால் வெறும் கல்வித்தகைமை மட்டும் போதாது. காதிநீதிபதி அல்லாஹ்வுக்கு பயந்த, நேர்மையான மனிதராக, தான் சார்ந்த சமூகத்தால் கௌரவமாக மதிக்கப்படுகின்றவராகவும் இருக்க வேண்டும். தாபரிப்புத் தொகையிலும் மாற்றங்கள் அவசியம்.

    மேற்குலக பெண்கள் குறிப்பாக ஐரோப்பிய பெண்கள் இஸ்லாமிய விவாக விவாகரத்துச் சட்டங்கள் தங்களின் சட்டங்களுக்குள் புகுத்தப்பட வேண்டும் என்று விரும்புகின்ற நிலையில் நாம் அவர்களின் சட்டங்களை வலிந்து இழுத்து நமக்குள் புகுத்த நினைப்பதை வேடிக்கை.

    ReplyDelete

Powered by Blogger.