Header Ads



முஸ்லிம் எம் பி,மாரில் சில‌ர், ஒழுக்க‌ம்கெட்ட‌ குடிகார‌ர்க‌ள் - முபாற‌க் மௌல‌வி

முஸ்லிம் விவாக‌ விவாக‌ர‌த்து ச‌ம்ப‌ந்த‌மாக‌ பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ர்க‌ளுட‌ன் பேசிவிட்டே முடிவெடுக்க‌ப்ப‌டும் என்ற‌ அமைச்ச‌ர் ஹிஸ்புள்ளாஹ்வின் க‌ருத்து ஏற்புடைய‌த‌ல்ல‌ என‌ உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் முபாற‌க் மௌல‌வி தெரிவித்தார்.

அவ‌ர் இது ப‌ற்றி தெரிவித்த‌தாவ‌து,

இன்றைய‌ பாராளும‌ன்ற‌த்தில் உள்ள‌ முஸ்லிம் எம் பிமாரில் சில‌ர் ஒழுக்க‌ம் கெட்ட‌வர்க‌ள், குடிகார‌ர்க‌ள் என்ற‌ குற்ற‌ச்சாட்டு ப‌ர‌வ‌லாக‌ உள்ள‌து. இவ‌ர்க‌ளிட‌ம் ஷ‌ரீய‌த் அடிப்ப‌டையிலான‌  திரும‌ண‌ ச‌ட்ட‌விதிக‌ள் ப‌ற்றிக்கேட்ப‌து இஸ்லாத்தை அவ‌ம‌திக்கும் செய‌லாகும்
 இது விட‌ய‌த்தில் உல‌மா ச‌பை, உல‌மா க‌ட்சி என்ப‌வ‌ற்றின் க‌ருத்தை கேட்ட‌பின்பே த‌ம‌து க‌ருத்தை முன் வைப்போம் என‌ ஹிஸ்புள்ளாஹ் சொல்லியிருந்தால் அது பாராட்ட‌த்த‌க்க‌தாக‌ இருந்திருக்கும்.


சிங்க‌ள‌ ம‌க்க‌ள் ம‌த்தியிலும் க‌ண்டிய‌ திரும‌ண‌ ச‌ட்ட‌ம் ந‌டைமுறையில் உள்ள‌து. இதில் மாற்ற‌ம் கொண்டு வ‌ர‌ வேண்டும் என‌ சிங்க‌ள‌ப்பெண்க‌ள் கோர‌வில்லை. ஆனால் இஸ்லாம் ப‌டிக்காத‌, ஐரோபிய‌ க‌லாசார‌த்தினால் க‌வ‌ர‌ப்ப‌ட்ட‌, ஐரோப்பாவின் ப‌ண‌த்துக்கு விலை போன‌ சில‌ முஸ்லிம் பெய‌ர் தாங்கி பெண்க‌ள் இல‌ங்கை முஸ்லிம் திரும‌ண‌ ச‌ட்ட‌த்தில் மாற்ற‌ம் தேவை என்கிறார்க‌ள். 
சிங்க‌ள‌ த‌னியார் ச‌ட்ட‌த்தில் மாற்ற‌ம் தேவை என‌ சொல்ல‌ப்ப‌ட்டால் எந்த‌வொரு சிங்க‌ள‌ அமைச்ச‌ரும் இத‌னை ம‌காநாய‌க்க‌ர்க‌ளிட‌மே கேட்க‌ வேண்டும் என‌ சொல்வார்க‌ளே த‌விர‌ சிங்க‌ள‌ பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ர்க‌ளிட‌ம் கேட்போம் என‌ சொல்ல‌மாட்டார்க‌ள்.
ஆனால் முஸ்லிம் திரும‌ண‌ ச‌ட்ட‌ மாற்ற‌த்துக்கு முஸ்லிம் எம் பீக்க‌ளிட‌ம் கேட்க‌வேண்டும் என்ப‌து பொறுப்பு வாய்ந்த‌ க‌ருத்தாக‌ தெரிய‌வில்லை.

இத்த‌கைய‌ முய‌ற்சிக‌ள் க‌ட‌ந்த‌ அர‌சில் முன்னெடுக்க‌ப்ப‌ட்ட‌ போது முஸ்லிம் திரும‌ண‌ ச‌ட்ட‌த்தில் கை வைப்ப‌து என்ப‌து முஸ்லிம்க‌ளின் ப‌ல‌ த‌னியுரிமையில் மாற்றார் கைவைக்க‌ வ‌ழி வ‌குக்கும்  என்ப‌தால் இதில் எத்த‌கைய‌ மாற்ற‌த்துக்கும் இட‌ம‌ளிக்க‌க்கூடாது என‌ உல‌மா க‌ட்சி க‌டுமையாக‌ எச்ச‌ரித்த‌து. இத‌னை ம‌ஹிந்த‌ அர‌சு ஏற்று அது விட‌ய‌த்தை கிட‌ப்பில் போட்ட‌து. அப்போதைய‌ நீதி அமைச்ச‌ரான‌ ஹ‌க்கீம் கூட‌ மேற்ப‌டி பெண்க‌ளின் கோரிக்கையை நிறைவேற்ற‌ துடித்த‌ போதும் ம‌ஹிந்த‌ ராஜ‌ப‌க்ஷ‌ முஸ்லிம் திரும‌ண‌ ச‌ட்ட‌த்தை கௌர‌வித்தார்.

ஆனால் இந்த‌ அர‌சாங்க‌ம் வ‌ந்த‌தும் முத‌லில் செய்த‌ வேலை முஸ்லிம் திரும‌ண‌ ச‌ட்ட‌த்தை மாற்ற‌ முய‌ற்சித்த‌துதான். நாட்டில் எத்த‌னையோ ப‌ல‌ பிர‌ச்சினைக‌ள் முஸ்லிம்க‌ளுக்கு இருக்கும் போது பாரிய‌ பாதிப்ப‌ற்ற‌ மு. தி. ச‌ட்ட‌த்தை ந‌ல்லாட்சியின் காவ‌ல‌ர்க‌ளான‌ ஐரோப்பிய‌ர்க‌ளின் திருப்திக்காக‌ மாற்ற‌ அர‌சு முய‌ன்ற‌து. இந்த‌ முய‌ற்சியை எதிர்த்து கொழும்பிலும் கிழ‌க்கிலும் முஸ்லிம்க‌ளால் ஆர்ப்பாட்ட‌மும் செய்ய‌ப்ப‌ட்ட‌து.
அத‌ன் பின் முஸ்லிம் திரும‌ண‌ ச‌ட்ட‌த்தில் கைவைக்க‌ மாட்டோம் என‌ பாராளும‌ன்ற‌த்தில் கூறிய‌ நீதி அமைச்ச‌ர் விஜேதாச‌ த‌ற்போது மீண்டும் திரும‌ண‌ ச‌ட்ட‌த்தை மாற்ற‌ முய‌ற்சி எடுக்கிறார். 

ஆக‌வே அர‌சின் க‌ள்ள‌த்த‌ன‌மான‌ இத்த‌கைய‌ முய‌ற்சிக்கு முஸ்லிம் எம்பீக்க‌ள் துணை போக்கூடாது என்ப‌துட‌ன் இது விட‌ய‌த்தை உல‌மா ச‌பை ம‌ற்றும் உல‌மா க‌ட்சியிட‌ம் பேசியே அர‌சு முடிவு செய்ய‌ வேண்டும் என‌ பாராளும‌ன்ற‌த்தில் பேச‌ வேண்டும் என‌ முஸ்லிம் எம்பீக்க‌ளை உல‌மா க‌ட்சி கேட்டுக்கொள்கிற‌து.

2 comments:

  1. உலமா சபையுடன் ஒப்பிட்டுப் பேசக்கூடிய அளவு தரம் வாய்ந்ததுதான் உலமாக் கட்சி என்றிருந்தால், இலங்கையின் அனைத்து முஸ்லிம் களையும், முஸ்லிம் பிரதேசங்களையும் உள்ளடக்கிய நிலத்தொடர்பற்ற ஓர் இஸ்லாமிய ஆட்சிக்கான ஏதாவது வேலைத் திட்டம் உங்களிடம் இருக்கிறதா?

    ReplyDelete
  2. I agree with you Mubarak Moulavi. Let the decision makers to talk to ACJU and get the consent of these Ulamass because they are the right people to talk.

    ReplyDelete

Powered by Blogger.