Header Ads



ஹோமா­கமயில் வைத்­தி­ய­சா­லையில், இப்படியும் நடந்தது

ஹோமா­கம வைத்­தி­ய­சா­லையில் நோயாளி ஒரு­வ­ருக்கு துணை­யாக தங்­கி­யி­ருந்த  பெண் ஒரு­வரை காதல் வலையில் வீழத்தி அவ­ரி­ட­மி­ருந்து பணத்தைப் பெற்று ஏமாற்றிச் சென்­ற­தாக அதே வைத்­தி­ய­சா­லையில் நோயாளி ஒரு­வ­ருக்கு துணை­யாக இருந்த நப­ரொ­ருவர் மீது முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ள­தாக கொட்­டாவ பொலிஸார் தெரி­விக்­கின்­றனர்.

மஹ­ர­கம வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டி­ருந்த தனது தாயை கவ­னித்துக் கொள்­வ­தற்­காக அங்கு தங்­கி­யி­ருந்த 52 வய­தான பெண் ஒருவர், தனது தாய் தங்­கி­யி­ருந்த கட்­டி­லை­ய­டுத்து தங்­கி­யி­ருந்த நோயா­ளியை கவ­னித்துக் கொள்­வ­தற்­காக இருந்த 32 வய­தான ஆண் ஒரு­வ­ருடன் காதல் தொடர்பை பேணி­யுள்ளார்.

இந்த நிலையில் இவர்கள் இரு­வரும்  விடுதி ஒன்­றுக்கு சென்று உல்­லா­ச­மாக இருந்­துள்­ளனர். அதன்­போது குறித்த ஆண், தான் நாளை திரு­மண நிகழ்­வொன்றில் கலந்­துகொள்ளவுள்­ள­தா­கவும் அதற்கு தன்­னிடம் போதி­ய­ளவு பணம் இல்­லை­யெ­னவும் அப்­பெண்­ணிடம் தெரி­வித்­துள்ளார்.

இதன்போது அப்பெண் தன்­னி­ட­மி­ருந்த 10 ஆயிரம் ரூபா பணத்­தினை அவ­ரிடம் கொடுத்­த­துடன்  தங்கச் சங்­கி­லி­யையும்  கொடுத்­துள்ளார் என தெரி­ய­வந்­துள்­ளது. 

அவற்றைப் பெற்­றுக்­கொண்ட அந்­நபர், இரண்டு நாட்­களில் நோயா­ளியை கவ­னித்துக் கொள்­வ­தற்­காக மீண்டும் வைத்­தி­ய­சா­லைக்கு திரும்­பி­வ­ரு­வ­தாக அப்­பெண்­ணிடம் உறு­தி­ய­ளித்­து­விட்டு சென்­றி­ருந்த போதிலும் அவர் திரும்­பி­யி­ருக்­காத கார­ணத்­தினால் குறித்த பெண் தனது 19 வய­தான மக­னுடன் இது­தொ­டர்பில் முறைப்­பாடு செய்ய கொட்­டாவ பொலிஸ் நிலை­யத்­துக்கு சென்­றுள்ளார்.

எனினும், அவ­ரது காதலன் பற்­றிய எவ்­வித தக­வல்­க­ளையும் அறிந்­தி­ராத கார­ணத்­தினால் முறைப்பாட்டை விசாரிக்க முடியாதெனவும், அவரை பற்றிய தகவல்களை தெரிந்துகொண்டு, மீண்டும் வந்து முறைப்பாடு செய்யுமாறும் கொட்டாவ பொலிஸார் அப்பெண்ணுக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர். 

No comments

Powered by Blogger.