Header Ads



இலங்கையைச் சேர்ந்த, ஷமா முயிஸ் ஐ.நா. சபையில் உரையாற்றுகிறார்


அக்குறனையே பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Collège Saint Exupéry கல்வி  கற்று   வரும்    ஷாமா முயிஸ்  ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையில் 34 ஆவது மனித உரிமை மாநாட்டில்  அமர்வில்  பெண்கள் மற்றும்  சிறுவர்கள் உரிமைகள் பாதுகாப்பு அமைப்பின் ஏற்பாட்டில் நாளை (17.03.2017) நடைபெறவுள்ள கருத்து சுதந்திரம் மற்றும் ஒன்று கூடும் உரிமை உப மாநாட்டில் உரையாற்றவுள்ளார்.

தனது பாடசாலை கல்விப் படிப்பில் முதல் நிலை மாணவியாக தனது தனது திறமையை காட்டி வரும் இவர்.   மனித உரிமைகள் செயற்பாடுகளிலும், வாசிப்பு, எழுத்துத் துறைகளில்  மிக ஆர்வம் கொண்டு விளங்குகிறார். 

 இவர் முன்னாள் அக்குறணை பிரதேச சபை உறுப்பினர் அல் ஹாஜ் வாஹாப்தீன் (வஹாப் மாஸ்டர்) மற்றும்  அக்குறணையின் பிரபல சமூக சேவையாளர் அல்ஹாஜ் மவ்ஜூத்யினதும் பேத்தியும் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.  

No comments

Powered by Blogger.