Header Ads



பணியிடத்தில் ஹிஜாப் தடை, ஐரோப்பிய நீதிமன்றம் ஆதரவாக தீர்ப்பு

தலையை மறைக்கும் ஹிஜாப் ஆடை உட்பட வெளியே தெரியக்கூடிய வகையிலான அரசியல், தத்துவ அல்லது மத அடையாளங்களை அணிவதற்கு தொழிலாளர்களுக்கு தடைவிதிக்க ஐரோப்பாவின் உயர்மட்ட நிதிமன்றம் ஒன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

எனினும் இந்த தடை நிறுவன சட்டவிதிகளுக்கு அமைய அதன் ஆடை கொள்கையை கொண்டதாக மாத்திரம் இருக்கும் என்று நீதிக்கான ஐரோப்பிய நீதிமன்றத்தின் நேற்றைய தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

எனினும் தொழிலிடத்தில் இஸ்லாமிய ஹிஜாப் ஆடை தொடர்பில் நீதிமன்றத்தின் முதல் தீர்ப்பாக இது இருந்தது.

பெல்ஜியத்தின் ஜி4எஸ் நிறுவனம் ஹிஜாப் அணிந்த வரவேற்பாளரை பணி நீக்கம் செய்த வழக்கு தொடர்பில் வழங்கப்பட்ட தீர்ப்பிலேயே ஐரோப்பிய நீதிமன்றம் இதனை குறிப்பிட்டுள்ளது. 

1 comment:

  1. Does this court promote allow to work in naked....?

    ReplyDelete

Powered by Blogger.