Header Ads



'இலங்கை படையினர் முற்றிலும் நிரபராதிகள்'


போர் குற்றம் சுமத்தப்பட்டுள்ள இலங்கை படையினர் முற்றிலும் நிரபராதிகள் என கூறும் விடயங்கள் அடங்கிய “விருவங்கே வித்தி வாசக்கய“ என்ற பெயரிலான அறிக்கை ஒன்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு தும்முல்லை உள்ள சம்புத்த மாளிகையில் இன்று பிற்பகல் 3 மணியளவில் இந்த அறிக்கை கையளிக்கப்படும் நிகழ்வு நடந்தது.

லெப்டினட் ஜெனரல் தயா ரத்நாயக்க, ரியர் அட்மிரல் எச்.ஆர். அமரவீர, ரியர் அட்மிரல் மொஹான் விஜேவிக்ரம, மேஜர் ஜெனரல் சீவலி வணிகசேகர, மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறி ஆகியோர் இந்த அறிக்கையை கோத்தபாயவிடம் கையளித்தனர்.

அறிக்கையை ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவில் சமர்பிக்கும் முன் இந்த அதிகாரிகள் அதனை நாளைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்க உள்ளனர்.

இதனையடுத்து ரியர் அட்மிரல் சரத் வீரசேகர எதிர்வரும் 16 ஆம் திகதி ஜெனிவா மனித உரிமை பேரவையில் சமர்பிக்க உள்ளார்.

No comments

Powered by Blogger.