Header Ads



இஸ்லாமியர்களுக்கு எதிரான இந்து மதவாதி முதலமைச்சராக தெரிவு - அமெரிக்க பத்திரிகை சாடல்

உத்தரப் பிரதேச சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து யோகி ஆதித்யநாத், முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். யோகி ஆதித்யநாத்தின் நியமனத்தை மதரீதியாக விமர்சனம் செய்து அமெரிக்க பத்திரிகையான நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது.

இதற்கு இந்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

யோகி ஆதித்யநாத்தின் நியமனம் குறித்து நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட செய்தியில், இந்தியாவில் சிறுபான்மையினரான இஸ்லாமியர்களுக்கு எதிரான இந்து மதவாதியான யோகி ஆதித்யநாத் உத்தரப் பிரதேச முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் மதச்சார்பற்ற இந்தியாவை இந்துக்களின் நாடாக மாற்றும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்தியாவின் முக்கியமான மாநிலத்தில் இந்துத்துவவாதியை முதல்வராக நியமித்துள்ளதாகவும் செய்தி வெளியிட்டிருந்தது.

யோகி ஆதித்யநாத்தின் நியமனத்தையும் பிரதமர் மோடியையும் மத ரீதியாக விமர்சித்து நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டதற்கு இந்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையிடம் இந்திய அரசு சார்பில் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

1 comment:

  1. What TIMES published was unequivocally truth. No need for further explanation for it. What ever said & done, Modi is a notorious criminal.

    ReplyDelete

Powered by Blogger.