Header Ads



"உலகில் கடைசி வரை நிலைத்திருக்கக்கூடிய மார்க்கம் இஸ்லாம் மட்டுமே" - பெர்னாட்ஷா


உலகில் எத்தனையோ மதங்கள் உள்ளன. கடவுளே இல்லை என்று சொல்லக்கூடிய கொள்கைகளும் மக்களை குழப்பிப் பார்க்கின்றன. ஆனால், இவற்றுள் இஸ்லாம் என்ற மார்க்கம் – கொள்கை, மிகப் பழமையானதும் அதே நேரம் மிக இளமையானதும் ஆகும்.

பழமையானது – உலகின் முதல் மனிதன் தொடங்கி உலகில் தோன்றிய அத்துணை நபிமார்களும் ஓரிறைக் கொள்கையையே போதித்தனர். ஆதலால், உலகின் பழமையான மார்க்கம் இஸ்லாமே.

இளமையானது – முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தான் இவ்வுலகிற்கு வந்த இறுதி நபி. அவர்களே முந்தைய நபிமார்களை மெய்ப்படுத்தி, ஓரிறைக் கொள்கையை அழுத்தமாகவும், ஆதாரபூர்வமாகவும் எடுத்து மக்களுக்கு போதித்தார். ஆதலால், இஸ்லாமே அனைத்திலும் இளமையானது.

1400 ஆண்டுகளுக்கு முன்பு, அரேபியப் பாலைவனத்தில் ஊறத் தொடங்கிய இஸ்லாம் எனும் சத்திய ஊற்று, இப்போது உலகம் முழுவதும் கடலென பரவிக் கிடக்கின்றது. வாளால் பரவிய மார்க்கம் என்று ஊடகங்கள் ஓயாது ஒலித்தாலும், அதற்கான பதிலை தன்னகத்தே பிரதிபலித்துக் கொண்டு, சில ஆண்டுகளுக்கு முன்பு வரை உலகின் இரண்டாவது பெரிய மதமாக (மார்க்கம்) இருந்த இஸ்லாம், இந்த ஆண்டு உலகின் மிகப்பெரிய மார்க்கமாக கத்தோலிக்க கிறிஸ்துவத்தை தாண்டி வளர்ந்துள்ளது.

உலக மக்கள் தொகையில், 19.2 விழுக்காடு முஸ்லிம்கள் எனவும், 17.4 விழுக்காடு கத்தோலிக்க கிறிஸ்துவர்கள் என்றும் கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் தலைவராக உள்ள “போப்” பின் ஆளுகைக்குட்பட்ட வாடிகன் நகரத்தில் இருந்து வெளிவரும் லொசெர்வேடோர் ரொமானோ (L’Osservatore Romano) என்ற செய்திப் பத்திரிகை தெரிவிக்கின்றது.

உலக மக்கள் தொகையில் கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை 113 கோடி மக்களாவர்; முஸ்லிம்களின் எண்ணிக்கை 130 கோடி எனவும் அப்பத்திரிகை தெரிவிக்கின்றது. வாடிகன் 2008 க்கான ஆண்டுப்புத்தகம் (Year Book) -இல் வெளியிடப்பட்டுள்ள இந்த புள்ளி விபரத்தை மேற்கத்திய உலகின் பெரும்பாலான செய்தி ஊடகங்களும் வெளியிட்டுள்ளன. இச்செய்தி உலகில் வேகமாக வளர்ந்து வரும் மார்க்கம் இஸ்லாம் (Fastest-growing religion) என்பதை நமக்கு ஆதாரத்தோடு தருகின்றது.

2 comments:

  1. No. That statistics concluded by the name but Allah conclud the Muslims who follows Quran and real sunnah. In that case, we should consider a statistics as Real Muslim and fake Muslim. So this statistic is wrong and we all should be true Muslims in order to correct the statistic. And sure Islam is true and Islam will grow.

    ReplyDelete
  2. அனைவரும் சொர்க்கம் செல்ல வேண்டும் என்ற இறுதித் தூதரின் கவலையை தம் கவலையாகக் கொள்வதே அவரைச் சரியாகப் பின்பற்றுவோரின் கவலையாகவும் இருக்க வேண்டும்.

    வீடு வீடாகச் சென்று மக்களை இறைவழியில் இணைப்பதற்காக எடுக்கும் மக்களின் தியாகங்களுக்கு நிகரான இன்னோர் உழைப்பை காண்பது அரிது.

    தூய இஸ்லாத்தை கற்பதற்காக எடுக்கும் அனைத்து முயற்சிகளும் பாராட்டப்படல் வேண்டும்.

    இறுதித் தூதரின் பின்னால் இன்னொரு தூதர் இல்லாததால் அவரைப் பின்பற்றுவோரின் கடமை அவரது தூதுவத்தை ஏனையோரிடம் எத்தி வைப்பதே.

    ReplyDelete

Powered by Blogger.