Header Ads



நிந்தவூருக்கு இலவச பாடநூல், செல்லாதது ஏன்..?

-மு.இ.உமர் அலி-

கல்முனை கல்வி வலயத்திற்கு உட்பட்ட நிந்தவூர் கோட்டத்தில் உள்ள  பாடசாலைகளுக்கு தரம் ஏழு மாணவர்களுக்கான புவியியல் பாடநூல் இதுவரை வழங்கப்படவில்லை.

இம்மாதம் 23ஆம் திகதி முதலாம் தவணைப்பரீட்சை நடைபெறவுள்ள வேளையில் மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டத்திற்கு அமைவாக உருவாக்கப்பட்ட கல்வி அமைச்சின் வெளியீட்டுப்பிரிவினால் வழங்கப்படும் இந்த இலவச பாடநூல் இதுவரை வழங்கப்படாமல் இருப்பதையிட்டு பெற்றோர்களும் ஆசிரியர்களும் விசனம் தெரிவித்து வருகின்றனர்.

மாணவர்,பெற்றோர்,மற்றும் ஆசிரியர்கள் செய்த முறைப்பாட்டினை  நிந்தவூர் கோட்டக்கல்வி அலுவலகத்தின்  அதிகாரி ஒருவருடன் தொடர்பு கொண்டு உறுதிப்படுத்தியதன் பின்னரே இச்செய்தி எழுதப்படுகின்றது.

பாடசாலைகள் ஆரம்பமாவதற்கு முன்னராகவே குறித்த இலவச பாடநூல்கள் மாணவர்களுக்கு  வழங்கப்படுவது  வழக்கம்,ஆனால்  முதலாம் தவணை முடிவடையவுள்ள தருணம் வந்தும் இதுவரை புத்தகங்கள் வளங்கப்பட்டாமல் இருப்பது கண்டிக்கத்தக்க விடையமாகும்.

எனவே அதிகாரிகள் உடன் நடவடிக்கை  எடுத்து மாணவர்களுக்கு குறித்த பாடநூல்கள் கிடைப்பதற்கு  உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

No comments

Powered by Blogger.