Header Ads



கிழக்கு முஸ்­லிம்கள் இணங்கும்வரை வடக்கு - கிழக்கு இணைப்பு சாத்­தியமில்லை - சுமந்­திரன்

கிழக்கில் வாழும் முஸ்­லிம்கள் எங்­க­ளுடன் இணங்கி வரும் வரைக்கும் வடக்கு, கிழக்கு இணைப்பு சாத்­தியம் இல்லை. இதுதான் உண்மை என தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பேச்­சா­ளரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் யாழ். மாவட்டப் பாரா­ளு­மன்ற உறுப்பின­ரு­மான எம்.ஏ.சுமந்­திரன் தெரி­வித்தார்.

பருத்­தித்­துறை தொகுதி தமி­ழ­ரசுக் கட்­சிக்­கிளைக் கூட்­டத்தில் கலந்து கொண்டு சம­கால அர­சியல் குறித்து உரை­யாற்றும் போதே அவர் இவ்வாறு தெரி­வித்தார். வடக்கு மாகா­ண­சபை உறுப்­பினர் ச.சுகிர்தன் தலை­மையில் நடை­பெற்ற இந்­நி­கழ்வில் எம்.ஏ. சுமந்­திரன் எம்.பி மேலும் கூறிய­தா­வது;

இரண்­டா­வது, கொடுக்­கப்­பட்ட அதி­கா­ரத்தை அந்த மாநி­லத்­தி­னு­டைய அங்­கீ­காரம் இல்­லாமல் திரும்பப் பெற முடி­யா­த­தாக இருக்க வேண்டும். இந்த இரண்டு அம்­சங்­களும் இருந்தால் அது சமஷ்டி அர­சி­ய­ல­மைப்புச் சட்டம். வடக்கு, கிழக்கு இணைப்பு எங்­க­ளு­டைய அபி­லா­ஷையின் ஓர் அடிப்­படை. அதில் எந்­த­வி­த­மான மாற்றுக் கருத்தும் இல்லை. வடக்கு கிழக்கு இணைக்­கப்­பட வேண்டும் ஆனால் அது உட­னடிச் சாத்­தியம் இல்லை

கிழக்கில் வாழும் முஸ்லிம் மக்கள் எம்முடன் இணங்கி வரும் வரைக்கும் அது சாத்­தியமில்லை. அது தான் உண்மை. இதைச் சொல்லிக் கொண்டு இன்னும் கிழக்கில் இருக்­கின்ற முஸ்லிம் மக்­களை அந்­நி­யப்­ப­டுத்­து­வ­தற்­கான பேச்­சு­களைப் பேசிக் கொண்­டி­ருந்தால், யார் வடகி­ழக்கு இணைப்­புக்கு எதி­ராக செயற்­ப­டு­கி­றார்கள். முஸ்லிம் மக்­களின் மனங்­களை நோக­டிப்­ப­தற்­கான பேச்­சு­க­ளையே தொடர்ச்­சி­யாக பேசிக் கொண்­டி­ருப்­பதைப் பார்த்தால்  வடக்­கு­கி­ழக்கு இணைப்பு ஏற்­ப­டாமல் செய்­வ­தற்­கா­கவே  சிலர் செய­லாற்­று­கி­றார்­களோ எனத் தோன்­று­கி­றது. 

உண்­மையில் நாங்கள் முஸ்லிம் மக்­களை திரும்ப அர­வ­ணைக்க வேண்டும். அவர்­க­ளுக்கு எங்கள் மீது நம்­பிக்கை வரவேண்டும். இந்த இரண்டு தரப்­பி­னர்­க­ளிலும் பிழைகள் இருக்­கின்­றன. அதனை தீர்க்க வேண்டும். அப்­பி­ழை­களை தீர்ப்­ப­தற்­கான பாதையில் நாங்கள் அடி­யெ­டுத்து வைத்தால்தான் அது சாத்­தி­ய­மாகும்.

ஆனால் அதனை நாங்கள் கைவிடப் போவ­தில்லை. அது முஸ்லிம் மக்­க­ளுக்கும் நன்கு தெரியும். முஸ்லிம் தலை­மை­க­ளுக்கும் தெரியும். இவ்­வி­டயம் இன்­றைக்கு சாத்­தியம் இல்­லா­விட்­டாலும் எதிர்­வரும் காலங்­களில் சாத்­தி­ய­மாகக் கூடிய பாதையிலேயே நாங்கள் பய­ணித்துக் கொண்­டி­ருக்­கின்றோம்.

கிழக்கு மாகா­ணத்தில் எங்­க­ளுக்கு 11 உறுப்­பி­னர்­களும் முஸ்­லிம்­க­ளுக்கு 7 உறுப்­பி­னர்­களும் இருக்­கின்­றார்கள். அப்­ப­டி­யி­ருக்­கத்­தக்­க­தாக நாங்கள் முஸ்லிம் காங்­கி­ர­ஸுடன் இணைந்து ஆட்­சியை நடத்திக் கொண்­டி­ருக்­கின்றோம். அங்கு முத­ல­மைச்­சரை முஸ்லிம் காங்­கி­ர­ஸுக்கே விட்டுக் கொடுத்­துள்ளோம்.

அவ்­வாறு கொடுத்து இணைந்த ஆட்­சியை வெற்­றி­க­ர­மாக இரண்டு வரு­டங்கள் நாம் நடத்­து­வ­தற்­கான காரணம் என்ன? முஸ்லிம் மக்­களும் தமிழ் மக்­களும் சேர்ந்து ஆட்சி செய்ய முடியும் என்­பதை இரண்டு மக்­க­ளுக்கும் நாங்கள் காண்­பிக்க வேண்டும்.  விடிவெள்ளி

2 comments:

  1. கிழக்கு முஸ்லிம்கள் ஒருபோதும் இதட்கு சம்மதிக்க மாட்டார்கள் .ஏனெனில் கிழக்கில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றார்கள் .எனவே வடக்கையும் கிழக்கையும் இணைத்து தங்களை சிறுபான்மையாக ஆக்கிக்கொள்ள ஒருபோதும் முஸ்லிம்கள் விரும்ப மாட்டார்கள் .

    ReplyDelete
    Replies
    1. Kilakkula muslimkal perunpamai illa tamilthan perunpamai muslimmavida tamil 40000 pear athikam ok lista eduththu paar yaar perumpamaiyenru mokka.therinshal mathiri kathaikkiran

      Delete

Powered by Blogger.