Header Ads



முக்கிய தீர்மானங்களை மேற்கொள்ள, முஸ்லிம் எம்.பி.க்கள் கூடுகிறார்கள்..!


-ARA.Fareel-

அர­சாங்கம் தயா­ரித்து வரும் புதிய அர­சி­ய­ல­மைப்பு மற்றும் புதிய தேர்தல் முறை, முஸ்லிம் தனியார் சட்டம், தம்­புள்ளை பள்­ளி­வாசல் தொடர்­பான நகர்­வுகள் தொடர்பில் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் அனை­வரும் ஒன்­று­கூடி கலந்­து­ரை­யாடி தீர்­மா­ன­மொன்­றினை நிறை­வேற்றிக் கொள்­ள­வுள்­ளனர்.

இந்தத் தீர்­மா­னங்கள் ஜனா­தி­பதி மற்றும் பிர­த­ம­ரிடம் கைய­ளிக்­கப்­ப­டு­மெ­னவும் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை ஒன்று கூட்டும் முயற்­சியில் தான் ஈடு­பட்­டுள்­ள­தா­கவும் தேசிய ஒரு­மைப்­பாடு மற்றும் நல்­லி­ணக்க இரா­ஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி தெரி­வித்தார்.

இந்­ந­கர்­வுகள் தொடர்பில் இரா­ஜாங்க அமைச்சர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில், முஸ்லிம் அரசியல் தலை­வர்கள் கட்சி மற்றும் கொள்கை வேறு­பா­டு­களை மறந்து ஒன்­றி­ணைந்து சமூ­கத்தின் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண்­ப­தற்கு முன்­வ­ரு­வ­துடன் நல்­லாட்­சியைப் பலப்­ப­டுத்­து­வ­தற்கு ஆத­ர­வ­ளிக்க வேண்டும்.

முஸ்­லிம்கள் மத்­தியில் கடந்த காலங்­களில் நில­விய பீதி அகன்று இன்று மக்கள் நல்­லாட்சி அர­சாங்­கத்தின் மீது நம்­பிக்கை வைத்­துள்­ளனர். முஸ்லிம் அர­சியல் தலை­வர்கள் சமூக நலனை மைய­மாகக் கொண்டு செயற்­பட வேண்டும்.

தம்­புள்ளை பள்­ளி­வாசல் விவ­காரம் பல வரு­டங்­க­ளாக தீர்க்­கப்­ப­டாதிருக்­கி­றது. பள்­ளி­வாசல் நிர்­வா­கிகள் முஸ்லிம் அர­சியல் தலை­வர்­க­ளிடம் பல தட­வைகள் கோரிக்­கை­கள் விடுத்தும் அவை நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை. எனவே உட­ன­டி­யாக அப் பிரச்­சி­னைக்குத் தீர்வு காண­வேண்­டி­யுள்­ளது.

முஸ்லிம் தனியார் சட்­டத்தில் திருத்­தங்­களைச் சிபார்சு செய்­வ­தற்கு நிய­மிக்­கப்­பட்ட குழு தனது அறிக்­கையை சமர்ப்­பிப்­பதில் தாமதம் ஏற்­பட்டு வரு­கி­றது. மேலும் புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்­பிலும் நாங்கள் கலந்­து­ரை­யாட வேண்­டி­யுள்­ளது.

தேசிய ஒரு­மைப்­பாடு மற்றும் நல்­லி­ணக்க அமைச்சு நாட்டில் இனங்­க­ளுக்­கி­டையில் புரிந்­து­ணர்­வையும் நல்­லு­ற­வி­னையும் ஏற்­ப­டுத்­து­வ­தற்கு பல வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றது.

இவ் வேலைத்­திட்­டங்­க­ளுக்கு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஊர் மக்களும் சிவில்சமூக அமைப்புக்களும் ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும்.

நாட்டில் அபிவிருத்தியிலும் தேசிய ஒருமைப்பாட்டிலும் நாம் அனைவரும் பங்காளர்களாக வேண்டும் என்றார்.

1 comment:

  1. This so-called good governance is good-for-nothing.

    ReplyDelete

Powered by Blogger.