March 19, 2017

முஸ்லிம் விவாக - விவாகரத்து சட்டத் திருத்தமும், பெண்களின் திருமண வயதும்

-ஏ.பீர் மகம்மது-

தற்போது  நடைமுறையில் இருந்து வரும் முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டுமென்ற கோரிக்கை காலத்துக்குக் காலம் மேலெழுந்தநிலையில் 2009 ம்ஆண்டு நீதியரசர் சலீம் மர்சூப் தலைமையில் பதினாறு பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டது .இக்குழு இருக்கத் தக்கதாக முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டு ஜீஎஸ்பீ சலுகைகளைப் பெற்றுக் கொள்வதற்கு வசதியாக இன்னுமொரு அமைச்சரவை உபகுழுவும் நியமிக்கப்பட்டுள்ளது .

சலீம் மர்சூப் தலைமையிலான குழு நியமிக்கப்பட்டு எட்டு வருடங்கள் கடந்துவிட்டன. இன்னமும் அதன் அறிக்கை உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவில்லை. இந்தநிலையில் இக்குழுவினர் மேற்கொண்ட பணிகள் பூர்த்தியடைந்துள்ளமையால்  கொழும்பில் இன்று (19) இறுதியாகச் சந்தித்து உறுப்பினர்களிடம் கையொப்பங்களைப் பெற்று அறிக்கையை வெளியிடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருவதாக பத்திரிகைச் செய்திகள் தெரிவிக்கின்றன..

குழுவொன்று  இருக்கத்தக்தாக அதன் அறிக்கை வெளிவர முன்னரே அமைச்சரவை உபகுழு நியமிக்கப்டுவதற்கான தேவை ஏன் ஏற்பட்டது என்பதற்கான பதில்தான் முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத் திருத்தத்தோடு ஜீ.எஸ்.பி.பிளஸை சேர்;த்துப் போடப்படும் முடிச்சு ஆகும். 

ஐரோப்பிய யூனியனின் இலங்கைக்கான து10துவர் ' ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகைகளை இலங்கை பெற்றுக் கொள்ள வேண்டுமாக இருந்தால் சர்வதேச சட்ட ஏற்பாடுகளுக்கு அமைய இங்குள்ள சட்ட ஏற்பாடுகள் அமைந்திருத்தல் அவசியமாகும்' என்று இதுதொடர்பில் கருத்துக் கூறுகையில் தெரிவித்தார்.

இலங்கையில் உள்ள சட்ட ஏற்பாடுகளின்படி முஸ்லிம் பெண்களின்; திருமண வயதெல்ல 12 வருடங்கள் ஆகும். இந்த வயதெல்லை உயர்;தப்பட வேண்டும் என்பதே இந்தக் கூற்றின் பின்னால் உள்ள வேண்டுகோள் ஆகும்.  இந்தச் செய்தியைத்  தொடர்ந்து கடந்த நான்கு மாதங்களாக அரசியல்வாதிகள்இ புத்திஜீவிகள் இ உலமாக்கள் இஅமைப்புகள் எனப் பல தரப்பினரும் தங்கள்பாட்டுக்கு எதிரும் புதிருமான செய்திகளையும்  கருத்துக்களையும் வெளியிட்டு வருகின்றனர். இலங்கையில்  வழமையான சட்டங்களோடு சில விசேட சட்டங்களும் நடைமுறையிலுள்ளன. அவற்றுள் ஒன்றுதான் முஸ்லிம் தனியார் சட்டமாகும். 

கண்டியில் வாழும் சிங்களவர்களுக்கு கண்டியச் சட்டமும் வடபுலத் தமிழர்களுக்கு தேசவழமைச் சட்டமும் பிரயோகிக்கப்படுவதைப்போல நாடு முழுவதிலும் வாழும் முஸ்லிம்களுக்கு மட்டும் பயன்படுத்தவென உள்ள சட்டமே முஸ்லிம் தனியார் சட்டமாகும்.  முஸ்லிம் தனியார் சட்டமானது முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டம் இ சொத்து வழியுரிமைச் சட்டம் இ பள்ளிவாயல்கள் தொடர்பிலான வக்பு சபைச் சட்டம் என மூன்று சட்டங்களை உள்ளடக்கியதாகும்

தற்போது நடைமுறையிலுள்ள விவாக விவாகரத்துச் சட்டமே தனியார் சட்டத்தின்கீழான பிரதான சட்டமாகும். இது 1954 ஆகஸ்;ட் மாதத்தில் இருந்து இலங்கையில் நடைமுறையில் இருந்து வருகின்றது. தற்போது நாட்டில் பேசு பொருளாகியிருப்பது முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டமாகும். முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டம் திருத்தம் பின்வரும்  முக்கிய விடயங்களில் கருத்தாடல்களைக் கொண்டிருக்கின்றது திருமண வயதெல்லைஇ  திருமணத்துக்கான மணப் பெண்ணின் நேரடிச் சம்மதம் இ இ பலதார மணம் இ சீதனம்  இ விவாகம் மற்றும் விவாகரத்து தொடர்பிலான நிறுவனங்களுக்கான பதவிகளில் பெண்களை நியமித்தல் இ கணவன் மiனைவியை விவாகரத்துச் செய்யும்போது வழங்கும் நஸ்டஈடு போன்ற பல விடயங்களே அவையாகும்.

இவற்றில் முஸ்லிம் பெண்களுக்கான ஆகக்குறைந்த திருமண வயதெல்லை என்பது சர்வதேசரீதியாக முன்னெடுக்கப்பட்டுவரும் பால்ய வயதுத் திருமணத்துக்கு எதிரான நடவடிக்கைகளோடு ஒத்துவரவில்லை என்பதே முஸ்லிம்களை உசுப்பி விட்டுள்ள விடயமாகும். இலங்கையில் நடைமுறையிலுள்ள பொதுச்சட்டத்தில் பெண்களின் ஆகக்குறைந்த திருமண வயதெல்லை பதினெட்டு ஆகும். ஆனால் முஸ்லிம் களுக்கான சட்டத்தில் பன்னிரெண்டாகும். பன்னிரெண்டு வயதினை அடையாதநிலையிலும்கூட காதிநீதிபதின் அனுமதியுடன் திருமணம் செய்யும் சந்தர்ப்பமும் இச்சட்டத்தில் காணப்படுகின்றது..  

மனித உரிமைகள் ஆணைக்குழு உலகம் தழுவியரீதியில் பால்ய வயதுத் திருமணத்துக்கு எதிராக நடவடிக்கைளை மேற்கொண்டிருக்கும்நிலையில் இலங்கையிலும் இதற்குச் சார்பாக சட்ட ஏற்பாடுகள் அமைந்திருக்க வேண்டுமென எதிர்பார்க்கின்றது. இதன் பின்னணியிலேயே ஐரோப்பிய ஒன்றியம் ஜீஎஸ்பி பிளஸ் சலுகைகளுக்கான நிபந்தனையாக முஸ்லிம் பெண்களின்  திருமண வயதுப் பிரச்சினையை முன்வைத்துள்ளது.  . 

ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்நிலைப்பாட்டை முஸ்லிம் சமூகம் ஏற்றுக் கொள்ளவில்லை.  குறிப்பிட்டதொரு வயதினை அடையாளப்படுத்தாமல் பருவ வயதை அடைந்ததும்  ( அயவரசவைல ) பெண்கள் திருமணம் செய்யலாம் என்று இஸ்லாம் கூறுகின்றது. அல்லாஹ்வின் குர்;ஆன் வசனத்துக்கு மாற்றமாகவும் நபிகள் நாயகத்தின் வாழ்வு முறையான ஹதீஸ் வெளிப்படுத்தும் கருத்துக்கு முரணாகவும் எந்தவொரு நடவடிக்கையையும் முஸ்லிம்கள் ஏற்கப் போவதில்லை. 

அதேவேளை குர்ஆன் ஹதீஸ்களில் சொல்லப்பட்டவைகளுக்கு மாற்றமில்லாத வகையில் முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளலாம் என்பது சிலரி;ன் கருத்தாகும் இதன்படி முஸ்லிம் பெண்களின் திருமண வயதெல்லையை பதினாறு வருடங்களாக அதிகரிக்கலாம். இஸ்லாத்தில் கூறப்பட்ட முதிர்ச்சி ( அயவரசவைல ) என்பது சிலர் நினைப்பதைப்போல உடல்ரீதியானது மட்டுமல்ல அது உளவியல் மற்றும் சமூகவில் சார்ந்ததுமாகும் என்பது அவர்களின் வாதமாகும். 

குழந்தையினைப் பெறுவதற்கான உடல் முதிர்ச்சியினையும் அதனைப் பராமரிக்க முடியுமான சமூக உளவியல் முதிர்ச்சியினையும் அச்சொல் கருத்தைக் கொண்டிருக்கின்றது என்பது இந்த வாதத்தின் அடிப்படையாகும். முஸ்லிம் நாடுகளான பாகிஸ்தானில் இந்த வயதெல்லை பதினாறாகவும் பங்களாதேசில் 18 ஆகவும் காணப்படுவதை அவர்கள் உதாரணமாகவும் காட்டுகின்றனர்.

இப்படியான வாதப் பிரதி வாதங்களுக்கு மத்தியில் எட்டு வருட கால இடைவெளிக்குப் பின்னர் நீதியரசர் சலீம் மர்சூப் தலைமையிலான முஸ்லிம் தனியார் சட்டத் திருத்த ஆலோசனைகள் வெளிவரவுள்ளன. முஸ்லிம் சமுகத்தினரின் மத்தியில் மேற்படி திருத்த ஆலோசனைகள் பிளவுகளை ஏற்படுத்தாமல் இருக்க வேண்டுமென்பதே அனைவரினதும் கருத்தாகும். 

0 கருத்துரைகள்:

Post a Comment