Header Ads



ஹக்கீம் - ஹரீஸ் விரிசலா..?

(ஹாசிப் யாஸீன்)

கரையோர மாவட்டத்தை தமிழ் மக்கள் அனுமதித்தால் வடக்கு கிழக்கு இணைப்புக்கு எதிர்ப்பில்லை என மு.கா தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் கல்முனை தமிழ் சிவில் பிரதிநிதிகள் சந்திப்பில் தெரிவித்ததாகவும் அதனை கூட இருந்து பிரதி அமைச்சர் ஹரீஸ் ஆமோதித்தாகவும் திரிவுபடுத்தி பொய்யான செய்திகளை மக்கள் மத்தியில் பரப்பும் உலமாக் கட்சியின் இலிவான  செயலினை கண்டிப்பதாக விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கரையோர மாவட்டத்துடன் வடக்கு கிழக்கு இணைப்பை முடிச்சுப் போட வேண்டாம் என அண்மையில் பிரதி அமைச்சர் ஹரீஸ் தெரிவித்த கருத்துடன் மு.கா தலைவர் அமைச்சர் ஹக்கீம் வடக்கு கிழக்கு இணைப்பிற்கு எதிர்ப்பில்லை என தெரிவித்ததாக சொல்லப்படும் கருத்தை தொடர்புபடுத்தி பிரதி அமைச்சரைப் பாராட்டியும் மு.கா தலைவரை விமர்ச்சித்து குற்றம்சுமத்தி பிரதி அமைச்சரையும் மு.கா தலைவரையும் மோதவிடும் உலமாக் கட்சியினதும் மு.கா எதிரணியினரினதும் உள்நோக்கம் நிறைவேறாது எனவும் பிரதி அமைச்சரின் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

மேலும் அச்செய்தியில் தெரிவித்திருப்பதானது,
கல்முனை தமிழ் சிவில் பிரதிநிதிகளுக்கும் மு.கா தலைவர் அமைச்சர் ஹக்கீம், பிரதி அமைச்சர் ஹரீஸ் உள்ளிட்ட மு.கா உறுப்பினர்களுடனான சந்திப்பில், கல்முனை தமிழ் பிரதேச செயலகம் தரமுயர்த்துதல், கல்முனை நகர அபிவிருத்தி திட்டத்தில் தமிழ் பிரதேசங்களை உள்ளீர்த்தல் மற்றும் கல்முனை மாநகர சபையால் தமிழ் பிரதேசங்கள் புறக்கணிக்கப்படுவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

இதன்போது பிரதி அமைச்சரிடம் தமிழ் பிரதிநிதிகள், கல்முனை தமிழ் பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படுவதற்கு தாங்கள் தடையாக இருக்கின்றீர்களா? என வினா எழுப்பினர்.

இதற்கு பிரதி அமைச்சர், அம்பாறை கரையோர தமிழ் பேசும் மக்களுக்காக ஒரு கரையோர மாவட்டத்தை உருவாக்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம். இது இரு சமூகங்களுக்குமான பொதுவான கோரிக்கையாகும். இதில் இரு சமூகத் தலைவர்களும் உடன்பாடு காணும் பட்சத்தில் கல்முனை தமிழ் பிரதேச செயலக தரமுயர்த்தல் என்பது ஒரு பிரச்சினையாக இருக்காது என்றார்.

இதனை ஏற்றுக்கொண்ட தமிழ் பிரதிநிதிகள், எமது தலைமை இரா. சம்பந்தன் ஐயாவை சந்தித்த வேளை அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் அம்பாறையில் பெரும்பான்மையாக வாழும் முஸ்லிம்களுடன் இணைந்துதான் வாழவேண்டும் எனக் ஆணித்தரமாக கூறியிருக்கின்றார். ஆகவே கரையோர மாவட்டத்தை நாங்கள் எதிர்க்கவில்லை எனத் தெரிவித்தனர்.

மேலும் இக்கலந்துரையாடலில் வடக்கு கிழக்கு இணைப்பு  பற்றி தமிழ் பிரதிநிதிகளால் பிரஸ்தாபிக்கப்பட்ட போது மு.கா தலைவர் அமைச்சர் ஹக்கீம், வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பாக தமிழ்த் தலைமைகளோடு பேச வேண்டியுள்ளதுடன் முஸ்லிம்களுக்கான தீர்வு என்ன என்பது பற்றியெல்லாம் விரிவாக பேச வேண்டியுள்ளது. இந்த நல்லாட்சி அரசாங்கத்தில் இதற்கெல்லாம் தீர்வுகள் கிட்டும் என்ற நம்பிக்கையில் தமிழ், முஸ்லிம் தலைமைகள் ஒன்றாக பயணிக்கிறோம் என தெரிவித்திருந்தார்.

தமிழ் பிரதிநிதிகளுடனான மு.காவின் கலந்துரையாடல் இவ்வாறிருக்கையில், சிலர் தங்களது கட்சி அரசியலுக்காக ஒட்டு மொத்த நிகழ்வையும் தங்களுக்கு ஏற்றாப்போல் சாதகமாக பயன்படுத்த முனைவது இவர்களின் அரசியல் வங்குரோத்துத் தனத்தை காட்டுவதுடன் இவ்வாறு நிகழ்வை திரிவுபடுத்தி கூறுவதன் மூலம் மு.காவின் செல்வாக்கை மக்களிடமிருந்து இல்லாமல் செய்யலாம் என பகற்கனவு காண்கின்றனர்..

அண்மைக் காலமாக பிரதி அமைச்சர் ஹரீஸைப் பற்றி முகநூல்களிலும், இணையத் தளங்களிலும் பாராட்டியும், போற்றியும் எழுதி வருகின்றனர். இவர்களின் உள்நோக்கம் மு.கா தலைவர் ஹக்கீமுடன் பிரதி அமைச்சர் ஹரீஸ் வைத்துள்ள உறவில் விரிசலை ஏற்படுத்துவதாகும். இதனை கட்சித் தலைமையும் பிரதி அமைச்சரும் புரிந்து கொள்ளாமல் இல்லை என்பதை இவர்கள் புரிந்து கொள்ளவேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

2 comments:

  1. தற்போது கிழக்கில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருக்கும்போது வடக்கையும் கிழக்கையும் இணைத்து முஸ்லிம்களை சிறுபான்மையாக்குவதட்கு ஒரு முஸ்லீம் முயட்சி எடுப்பானாக இருந்தால் அவன் நிச்சயமாக முஸ்லிம்களின் துரோகியாகத்தான் இருப்பான் .

    ReplyDelete
  2. ennada ithu karayoramavaddathukku tamilarhalidam anumathi kepathu.....
    muthalil
    1.vada kilaku inaippu?
    2.karayora mavaddam?
    3.muslim thani alahu?
    4.samasdthi murai?
    5. nilam dodarpatta muslim mahanam
    6. denkilankku alahu
    ivarai muthalil SLMC Illa irukkura MP nalla thelivu vendumda..........

    ReplyDelete

Powered by Blogger.