Header Ads



இலங்கைக்கு ரஜினி வருவதை, ஆதரிக்கும் சம்பந்தன்

நடிகர் ரஜினிகாந்த் இலங்கைக்கு விஜயம் செய்வதற்றும், வீடுகளை மக்களிடம் கையளிப்பதற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித்தலைவருமான இரா சம்பந்தன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இந்திய ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. குறித்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கையில் வடக்கு பகுதிகளில் போரால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு, ஞானம் அறக்கட்டளை மூலம் 150 வீடுகளை இலவசமாக கட்டித் தருகிறது லைகா நிறுவனம். எதிர்வரும் ஏப்ரல் 9ஆம் மற்றும் 10ஆம் திகதி இதற்கான விழா யாழ்ப்பாணத்தில் நடக்கின்றது.

இந்த விழாவுக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பயனாளிகளுக்கு வீடுகளை வழங்குகிறார் நடிகர் ரஜினிகாந்த்.

போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு லைகா நிறுவனம் இலவசமாக வீடுகள் கட்டித் தருகிறது. சில மாதங்களுக்கு முன் இதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் நானும் பங்குபெற்றிருந்தேன்.

தற்போது அந்த வீடுகளைக் கையளிப்பதற்காக பிரபல நடிகர் ரஜினிகாந்த் அவர்களை லைகா நிறுவனத்தினர் அழைத்திருக்கிறார்கள்.

அது வரவேற்கத்தக்க ஒரு விஷயம். அவர் தமிழ் திரைப்பட உலகில் மிகப் பிரபலமான நடிகர், மக்களுடைய அன்பையும் ஆதரவையும் பெற்றவர்.

அவர் வருவது ஒரு சிறப்பான தருணத்தை நிறைவேற்றுவதற்காக. ஆகபடியால், அவர் வருகையை எல்லோரும் வரவேற்க வேண்டும். இந்த விஷயம் சிறப்பாக நிறைவேற எல்லோரும் உதவி செய்ய வேண்டும் என சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.

ரஜினி யாழ்ப்பாணம் செல்கின்றார் என்ற செய்தி வெளியாகிய உடனே விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.