Header Ads



கிழக்கு மாகாண முஸ்லிம் பிரதிநிதிகள், மஹிந்தவை சந்திக்கின்றனர்

கிழக்கு மாகாண முஸ்லிம் பிரதி நிதிகள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாட நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக முஸ்லிம் முன்போக்கு முன்னணியின் செயலதிபர் ஏ.எச்.எம். அஸ்வர் தெரிவித்தார்.

இந்த சந்திப்பு தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மூன்று மாவட்டங்களில் இருக்கும் முஸ்லிம் பிரதிநிதிகள் எதிர்கால அரசியல் மற்றும் பல விடயங்கள் தொடர்பாக கலந்துரையாட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்திக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தனர். அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க எதிர்வரும் 7ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 5.30 மணிக்கு சந்திப்பதாக தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண முஸ்லிம் பிரிதிநிதிகளுடனான இந்த சந்திப்பு முதலில் மஹிந்த ராஜபக்ஷவின் நெலும் மாவத்த அலுவலகத்தில் இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்டபோதும் அன்று மாலை 4 மணிக்கு கொழும்பு விகாரமாதேவி பூங்கா வளாகத்தில் இடம்பெறவுள்ள சர்வதேச மகளிர் தின நிகழ்வில் மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொள்ளவிருக்கின்றார். அதனால் குறித்த சந்திப்பை கொழும்பு விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள அவருடைய இல்லத்தில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

1 comment:

Powered by Blogger.