Header Ads



ஹிருணிக்கா ஜனாதிபதி வேட்பாளரா..?

இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் இளம் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமசந்திர போட்டியிட வாய்ப்புள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2020ம் ஆண்டில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில், ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளராக ஹிருணிக்கா நியமிக்கப்படவுள்ளதாக சமூக ஆர்வலர் ஒருவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆட்சியின் போது, பாதுகாப்பு அமைச்சின் கண்கானிப்பு உறுப்பினராக பாரத லக்ஷ்மன் பிரேமசந்திர சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த கொலையை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா மேற்கொண்டார்.

தந்தையின் மறைவை அடுத்து ஹிருணிக்கா பிரேமசந்திர அரசியலுக்குள் நுழைந்தார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்காக செயற்பட்ட ஹிருணிக்கா, ஐக்கிய தேசிய முன்னணியில் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டார்.

கொழும்பு மாவட்டத்தில் இளைஞர்களின் ஈர்ப்பை பெற்றுள்ள பிரதான கதாபாத்திரமாக உள்ள ஹிருணிக்காகவின் வருகையை தொடர்ந்து, நீண்ட காலம் ஐக்கிய தேசிய கட்சியில் செயற்பட்ட ரோசி சேனாநாயக்கவின் நாடாளுமன்ற ஆசனம் இழக்கப்பட்டது.

இந்த நிலையில் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ஹிருணிக்கா ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவார் என கூறப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. Not a good choice for immediate consideration. Lacks maturity. Needs to be observed for some more time for responsible and credible behaviour.

    ReplyDelete

Powered by Blogger.