Header Ads



உலமா சபையிடம் பெண்கள், விடுத்துள்ள கோரிக்கை

நாட்­டி­லுள்ள அரபுக் கல்­லூ­ரிகள் மற்றும் அரபு மத்­ர­ஸாக்­களின் பாடத்­திட்­டத்தில் முஸ்லிம் தனியார் சட்­டத்­தையும் உள்­வாங்­கு­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ளும் படியும் பள்­ளி­வா­சல்­களின் நிர்­வா­கிகள் மற்றும் முஸ்லிம் அர­சி­யல்­வா­தி­க­ளுக்கு இச்­சட்டம் தொடர்­பான தெளி­வூட்­டல்­களை வழங்­கு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்கும் படியும் முஸ்லிம் பெண்கள் அபி­வி­ருத்தி நம்­பிக்­கை­யகம் அகில இலங்கை ஜம்இய்­யதுல் உலமா சபை­யிடம் கோரிக்கை விடுத்­துள்­ளது.

அகில இலங்கை ஜம் இய்­யத்துல் உலமா சபையின் பிர­தி­நி­தி­களை முஸ்லிம் பெண்கள் அபி­வி­ருத்தி நம்­பிக்­கை­ய­கத்தின் பிர­தி­நி­திகள் உலமா சபையின் தலைமைக் காரி­யா­ல­யத்தில் சந்­தித்து கலந்­து­ரை­யா­டி­யதன் பின்பு இக்­கோ­ரிக்­கையை எழுத்து மூலம் முன்­வைத்­தனர். முஸ்லிம் தனியார் சட்­டத்தில் 15 திருத்­தங்­க­ளுக்­கான பரிந்­து­ரை­க­ளையும் அவர்கள் முன்­வைத்­தனர்.

முஸ்லிம் பெண்கள் நம்­பிக்­கை­யகம் அகில இலங்கை ஜம் இய்­யத்துல் உலமா சபை­யிடம் முன்­வைத்­துள்ள மேலும் கோரிக்­கை­க­ளா­வன: காதி­நீ­தி­மன்­றங்­களில் பெண்கள் பாதிக்­கப்­ப­டு­வ­தி­லி­ருந்தும் தவிர்ப்­ப­தற்­காக பெண்­களும் காதி­நீ­தி­ப­தி­க­ளாக நிய­மிக்­கப்­ப­ட­வேண்டும். 

காதி­மேன்­மு­றை­யீட்டுச் சபையின் கீழ் காதிகள் ஆலோ­சனைச் சபை ஒன்று இயங்க வேண்டும் என்று குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தாலும் அது தற்­போது இயங்­கா­ம­லுள்­ளது.

அந்த ஆலோ­சனை சபையை இயங்கச் செய்­வ­துடன் அதில் அங்கம் பெறும் ஐவரில் ஒரு பெண் அங்­கத்­த­வரும் நிய­மிக்­கப்­பட வேண்டும். தகுந்த கார­ணங்­க­ளின்றி கண­வ­னினால் தலாக் செய்­யப்­படும் பெண்­க­ளுக்கும் கண­வனின் கொடு­மைகள் கார­ண­மாக பஸஹ் செய்து கொள்ளும் பெண்­க­ளுக்கும் மத்தாஹ் (நஷ்­ட­ஈடு) வழங்­கப்­ப­ட­வேண்டும்.

இஸ்­லாத்தில் கூறப்­பட்­டுள்ள பல­தார மணத்தை நாங்கள் எதிர்க்­க­வில்லை.

ஆனால் பல­தார மண அனு­மதி நிபந்­த­னை­களின் அடிப்­ப­டை­யி­லேயே வழங்­கப்­பட வேண்டும். காதி­ நீதிமன்­றங்­க­ளினால் நீதிவான் நீதி­மன்­றுக்கும் மாவட்ட நீதி­மன்­றுக்கும் அனுப்பி வைக்­கப்­படும் தாப­ரிப்பு மற்றும் கைக்­கூலி கொடுப்­ப­ன­வுகள் தொடர்­பான வலி­யு­றுத்தல் கட்­ட­ளை­களின் சட்ட நட­வ­டிக்­கை­களின் போது ஏற்­படும் பிரச்­சி­னைகள் தவிர்க்­கப்­பட வேண்டும்.

பல பள்­ளி­வா­சல்கள், வக்பு சபையில் பதிவு செய்­யப்­ப­டா­துள்­ளன. இவ்­வா­றான பள்­ளி­வா­சல்கள் முஸ்லிம் தனியார் சட்ட விவ­கா­ரங்­களில் தலை­யிட்டு சில நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்­கின்­றன. மனித உரிமை மீறல்கள் இடம்­பெ­று­கின்­றன. இவ்­வா­றான பள்­ளி­வா­சல்கள் வக்பு சபையில் பதிவு செய்­யப்­ப­டா­தி­ருப்­ப­தினால் உரிய சட்ட நட­வ­டிக்கை எடுக்க முடி­யா­துள்­ளது. எனவே பள்­ளி­வா­சல்கள் வக்பு சபையில் பதிவு செய்­யப்­பட வேண்டும்.

முஸ்லிம் பெண்­களின் உரி­மை­க­ளுக்­காக குரல் கொடுக்கும் முஸ்லிம் பெண்­களின் படங்கள், முக­நூல்­களில் வெளி­யி­டப்­பட்டு கொச்சைபடுத்­தப்­ப­டு­கின்­றன. அவ்­வா­றான முக­நூல்­க­ளுக்கு எதி­ராக உலமா சபை நட­வ­டிக்கை எடுக்க வேண்டும்.

முஸ்லிம் அர­சி­யல்­வா­தி­களில் அநேகர் ஷரீஆ சட்டம் மற்றும் முஸ்லிம் தனியார் சட்டம் என்­பன தொடர்பில் அறி­வற்­ற­வர்­க­ளாக இருக்­கி­றார்கள். இவர்­க­ளுக்கு விழிப்­பு­ணர்வு பயிற்சிப்பட்டறைகள் நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.

கலந்துரையாடலில் முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நம்பிக்கையகத்தின் பணிப்பாளர் ஜூவைரியா மொஹிதீன் தலைமையில் பிரதிநிதிகளும், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ.முபாறக் தலைமையில் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.       

 ARA.Fareel


2 comments:

  1. Good initiatives, Better to take these requests constructively and consider changes positively.

    ReplyDelete
  2. முஸ்லிம் நுகர்வோர் எவ்வாறு 'ஹலால்' நற்சான்றிதழ் மூலம் பயன் அடைகிரார்களோ, அதே போன்ற நன்மையை முஸ்லிம் அரசியல் வாதிகள் விடயத்திலும் எதிர்பார்ப்பது இங்கு உணர்த்தப்படுகிறது.

    ReplyDelete

Powered by Blogger.