Header Ads



'ஜெனீவாவில் தலையை ஆட்டிவிட்டு, நாட்டிற்குள்வந்து போலி கோஷம் எழுப்புவதில் பலனில்லை'

அர­சாங்­கத்தின் இரட்டை வேடம் ஐ.நா. மனித உரிமைகள் பேர­வையில் இலங்­கையின் எதிர்காலத்தை கேள்­விக்­கு­றி­யாக்­கி­யுள்­ளது.

போர்க்குற்ற விசா­ர­ணைகள் சர்­வ­தேச நீதி­ப­தி­களின் பங்­க­ளிப்­புடன் நடைபெ­று­வது உறு­தி­யாகும் வகை­யி­லேயே புதிய தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட உள்­ள­தாக முன்னாள் வெளி­வி­வ­கார அமைச்சர் பேரா­சி­ரியர் ஜீ.எல். பீரிஸ் தெரி­வித்தார்.

பொது மக்­களை ஏமாற்றும் வகையில் ஜனா­தி­பதி மற்றும் பிர­தமர் உள்­ளிட்ட நல்­லாட்சி அர­சாங்­கத்தின் அமைச்­சர்கள் போலி­யான தர­வு­களை வெளிப்­ப­டுத்தி வரு­கின்­றமை மிகவும் மோச­மா­ன­தொரு நிலை­யாகும். எனவே நாட்டின் எதிர்­காலம் குறித்து  பொறுப்­புடன் சிந்­திக்க வேண்­டிய கட்­டாயம் அனை­வ­ருக்கும் காணப்­ப­டு­வ­தா­கவும் அவர்  குறிப்­பிட்டார்.


போர்க்குற்­றச்­சாட்­டுக்­களை இன்னும் இரண்டு ஆண்­டு­க­ளுக்குள் விசா­ரணை செய்து சம்­பந்­தப்­பட்ட படை­யி­ன­ருக்கு எதி­ராக சர்­வ­தேச குற்­ற­வியல் சட்­டத்தின் கீழ் நட­வ­டிக்கை எடுப்­ப­தாக இலங்கை ஜெனி­வாவில் மீண்டும் உறு­தி­மொழி வழங்­கி­யுள்­ளது. 2015 ஆம் ஆண்டு நிறை­வேற்­றப்­பட்ட இலங்கை தொடர்­பான ஐ.நா. தீர்­மா­னத்தின் 6 ஆவது தீர்­மானம் சர்­வ­தேச நீதிப­திகள் மற்றும் குற்­ற­வியல் விசா­ர­ணை­யா­ளர்­களை உள்­ள­டக்­கிய கலப்பு விசா­ர­ணைக்­கான அங்­கீ­கா­ர­மாகும்.

சர்­வ­தேச நீதி­ப­திகள் விவ­கா­ரத்தை அர­சாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் அதனை நீக்­கு­வ­தற்கு செயற்­பட்­டி­ருக்க வேண்டும்.

அவ்­வாறு எத­னையும் செய்­யாது  ஜெனி­வாவில் அனைத்து விட­யங்­க­ளுக்கும் தலையை ஆட்டி விட்டு இல்லை நாங்கள் ஏற்றுக் கொள்ள போவ­தில்லை என்று இலங்­கையில் கோஷ­மி­டு­வதில் பல­னில்லை. எனவே நாட்டு மக்கள் தற்­போ­தைய நிலை­மை­களை புரிந்து கொள்ள வேண்டும்.

ஜெனி­வாவில் அர­சாங்கம் செயற்­ப­டு­கின்ற விதம் இலங்­கையின் எதிர்­காலம் பாரிய சவா­லாகி விடும் நிலை­யி­லேயே காணப்­ப­டு­கின்­றது. நாளை  புதன்கிழமை நடை­பெ­ற­வுள்ள விவா­தத்தில் சர்­வ­தேச நீதி­ப­திகள் தொடர்­பான நிலைப்­பாட்டை அர­சாங்கம் வெளிப்­ப­டை­யாக கூற வேண்டும்.

இந்த சந்­த­ர்ப்­பத்தை தவறவிட்டால் அனைத்­து­லக குற்­ற­வியல் நீதி­ப­திகள் மற்றும் சட்­ட­வா­ளர்கள் நாட்­டுக்கு  வந்து இரா­ணு­வத்­திற்கு எதி­ரான விசா­ர­ணை­களை முன்­னெ­டுப்­பார்கள்.

இதன் பின்னர் அடை­யாளம் வெளிப்­ப­டுத்­தாத சாட்­சி­யங்­களின் அடிப்படையில் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு இராணுவத்திற்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கும் நிலை ஏற்படும். அரசாங்கம் சமாளிப்பதற்காக தலையை ஆட்டி விட்டு நாட்டிற்குள் வந்து  போலியான கோஷங்கள் எழுப்புவதில் பலனில்லை  என்றார்.

No comments

Powered by Blogger.