Header Ads



தனது காரில் மோதுண்ட பசுவுக்கு, வீதியில் சத்திரசிகிச்சை - மஹ­ர­கம வைத்­தி­யரின் மனிதாபிமானம்


தனது மனை­வியின் சகோ­த­ரியின் திரு­ம­ணத்­துக்­காக வெலி­ச­ர­வி­லி­ருந்து குரு­ணாகல் நோக்கி பய­ணித்­துக்­கொண்­டி­ருந்த மஹ­ர­கம புற்­றுநோய் வைத்­தி­ய­சா­லையின் சத்­திர சிகிச்சை நிபு­ண­ரான ரந்தில் பிரமோத் டி அல்விஸ். தனது காரில் மோதுண்டு படு­கா­ய­ம­டைந்த பசுக்கன்று ஒன்­றுக்கு வீதியில் வைத்து சத்­திரசிகிச்சை மேற்­கொண்­டுள்ளார்.

அதன்­போது பிடிக்­கப்­பட்ட புகைப்­ப­டங்­களை அவ­ரது சகோ­தரர் தனது பேஸ்­புக்கில் பதி­வேற்­றி­யுள்ளார். கடந்த 4 ஆம் திகதி காலை 8 மணி­ய­ளவில் தனது பய­ணத்தை  ஆரம்­பித்­தி­ருந்த குறித்த வைத்­தி­யரின் காரில் ஏக்­கல பிர­தே­சத்தில் வைத்து இவ்­வாறு பசுக் கன்­றொன்று மோதுண்­டி­ருந்­தது. 

இப்­பசுக் கன்­றினை நாயொன்று துரத்­தி­ய­மை­யினால், பயத்தில் பிர­தான வீதிக்கு ஓடி­வந்து காரில் மோதுண்­டி­ருந்­த­தாக சம்­ப­வத்தை நேரில் அவ­தா­னித்­த­வர்கள் தெரி­வித்­தி­ருந்­தனர். 

விபத்­துக்­குள்­ளான கன்றின் முன்­னங்­கால்கள் காரின் பொனட் பகுதி மோதுண்­டதில் காலொன்றின் என்பு வெளியில் வந்­துள்­ளது. தன்­னி­ட­மி­ருந்த உப­க­ர­ணங்­களை வைத்து அரை­வாசி சத்­தி­ர­சி­கிச்­சையை மேற்­கொண்­டி­ருந்­த­தா­கவும் அவ்­வ­ழி­யாக பய­ணித்­தி­ருந்த இலங்கை தேசிய வைத்­தி­ய­சா­லையின் தொழில்­நுட்­ப­வி­ய­லாளர் ஒருவர் ஜாஎல நக­ருக்கு சென்று மருந்­து­களை சத்­தி­ர­சி­கிச்சை உப­க­ர­ணங்­க­ளையும் வாங்கி வந்­தி­ருந்­த­தா­கவும் அத்­துடன் அரு­கி­லி­ருந்து வர்த்­தக நிலையம் ஒன்­றி­லி­ருந்த ஒரு­வரும் ஒத்­து­ழைப்பு வழங்­கி­யி­ருந்­த­தா­கவும் அப்­ப­திவில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

வெற்­றி­க­ர­மாக நடு­வீ­தியில் வைத்து சத்­திர சிகிச்­சையை மேற்­கொண்­டதன் பின்­னரே வாக­னத்தின் காப்­பு­றுதி நிறு­வ­னத்­துக்கு அறி­வித்­துள்­ள­துடன் அதன்­போதே அவர் தனது வாகனம் சேத­ம­டைந்­தி­ருப்­ப­த­னையும் அவ­தா­னித்­துள்ளார். 

வாகனம் இயக்க முடி­யாத நிலையில் இருந்­த­மை­யினால் அதனை வேறொரு வாகனமொன்றின் உதவியுடன் எடுத்துச் சென்றுள்ளனர்.

தனது சார்பில் எவ்வித தவறும் இல்லாதிருந்த நிலையிலும் தனது பயணம் குறித்து சிந்திக்காது உதவிய வைத்தியர் தொடர்பில் அநேகமானோர் பாராட்டுகளை தெரிவி த்துள்ளனர்.

(ரெ.கிறிஷ்­ணகாந்)

6 comments:

  1. Excellent but they don't treat human like that. When they are on strike, we can see there humanity, how people suffering in the hospital.
    To achieve there request, they use innocent people as there human shields. Like Prabaharam did in the last time of his war.
    Anyway I don't know much about this Doctor. He might be not one of them.

    ReplyDelete
    Replies
    1. If you don't no something please you stopped writing or commenting against something!!! What you know about the Sri Lankan cancer hospital (Maharagama) doctors??? Go and spend/ see the place one day when you have time.

      Delete
    2. You need to have broad knowledge, not a one incident. Thank you .

      Delete
  2. If you don't no something please you stopped writing or commenting against something!!! What you know about the Sri Lankan cancer hospital (Maharagama) doctors??? Go and spend/ see the place one day when you have time.

    ReplyDelete
  3. If you don't no something please you stopped writing or commenting against something!!! What you know about the Sri Lankan cancer hospital (Maharagama) doctors??? Go and spend/ see the place one day when you have time.

    ReplyDelete

Powered by Blogger.