Header Ads



முஸ்லிம் குழந்தைக்கு கனடா பிரதமரின், பெயரை சூட்டிய இஸ்லாமிய பெற்றோர்

கனாடாவில் குடியிருக்கும் சிரியா குடும்பம் ஒன்று தங்களுக்கு பிறந்த குழந்தைக்கு கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பெயரை சூட்டி நன்றி தெரிவித்துள்ளனர்.

கனடாவின் ஒன்ராறியோ பகுதியில் குடியிருந்து வருபவர்கள் சிரியாவில் இருந்து புலம்பெயர்ந்த தம்பதிகள் Tarfa Ali Al Shheida மற்றும் அவரது கணவர் Yeyha Al Jaafar.

சிரியாவில் நெருக்கடி நிலை ஏற்பட்டதன் காரணமாக கனடாவில் புலம்பெயர்ந்த 40,000 குடும்பங்களில் இவர்களும் அடங்குவர்.

இந்நிலையில் கடந்த மாதம் இவர்களுக்கு பிறந்த குழந்தைக்கு ஜஸ்டின் என பெயர் சூட்டி தங்களின் நெகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

மட்டுமல்ல, குறித்த குழந்தை பெண்ணாக பிறந்திருந்தால் கனடா என்றே பெயர் சூட்டியிருப்போம் என்று தம்பதிகள் தெரிவித்துள்ளது அவர்களின் உணர்ச்சிப்பெருக்கை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

குறித்த விடயத்தை கேள்வியுற்ற பிரதமர் அலுவலகம், இச்செயல் மிகவும் உணர்வு பூர்வமானது என அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் இதேபோன்று ஒரு சிரியா குடும்பம் தங்களது மகனுக்கு ஜஸ்டின் என பெயர் சூட்டி தங்களது நன்றியை பதிவு செய்துள்ளது.

கனடிய மக்களிடத்தில் மனிதத்தன்மையை காண்பதாக குறிப்பிட்ட குறிப்பிட்ட சிரியா குடும்பம், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மீது அளவு கடந்த பாசம் வைத்துள்ளதாக குறிப்பிட்டனர்.

Shheida கருவுற்றதாக தெரிய வந்த முதல் கணம் முதல் பிறக்கும் குழந்தை ஆணாக பிறந்தால் ஜஸ்டின் என பெயர் சூட்ட வேண்டும் என முடிவு செய்ததாக தம்பதிகள் இருவரும் ஒருமனதாக தெரிவித்துள்ளனர்.

பிரதமர் ஜஸ்டின் இல்லை எனில் தற்போது தாங்கள் உயிருடன் இருப்போம் என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை என கூறும் ஜாபர் மற்றும் Shheida தம்பதிகள், தங்களின் வாழ்க்கை தரம் உயர்வடைய காரணமே பிரதமர் ஜஸ்டின் தான் என குறிப்பிட்டனர்.


2 comments:

  1. நல்ல பசுந்து ..... இது மட்டுமா இல்ல இன்னம் ஈக்கா ??

    ReplyDelete
  2. The Syrian family goes beyond the limit.

    ReplyDelete

Powered by Blogger.