Header Ads



கால்கள் இல்லை, குழந்தை பெற்ற பெண் - வைத்தியர்கள் பிரமிப்பு


பிரித்தானியாவில் கால்கள் ஊனமான (பிறவிக் கோணல்) பிறந்த பெண் ஒருவர் தாயாக மாறிய சம்பவம் வைத்தியர்களை பிரமிக்க வைத்துள்ளது.

26 வயதான Lizzy Georgeson என்ற பெண்ணே இவ்வாறு குழந்தை ஒன்றை பெற்றெடுத்துள்ளார்.

கால்கள் ஊனமுற்ற குறித்த பெண், மேலதிக எடையை தாங்கி குழந்தையை பெற்றுக் கொள்வது குறித்து வைத்தியர்கள் கவலை தெரிவித்து வந்துள்ளனர்.

பிரித்தானியாவில் உள்ள முதல் இரண்டும் கால்களையும் இழந்த மொடல் எனவும் குறித்த பெண்ணை அழைப்பார்கள்.

இது தொடர்பில் குறித்த பெண் பின்வருமாறு தெரிவித்துள்ளார்,

கர்ப்பகாலம் முழுவதும் சக்கர நாற்காலியிலேயே நான் சென்றேன். எனக்கு இடுப்பு பகுதிகளில் அதிக வலி இருந்தது. ஆனால் என் அழகிய ஹென்றியை பெற்றெடுத்த பிறகு இந்த வழிகள் தொடர்பில் நான் கவலை கொள்ளவில்லை என அவர் கூறியுள்ளார்.

கர்ப்பம் தொடர்பில் Lizzy Georgeson மற்றும் அவரது கணவர் Lewis சந்தோசமடைந்துள்ளனர். குறித்த குழந்தை ஆரோக்கியமாக பிறந்துள்ளது.

பிறவியில் ஊனத்துடன் வாழ்ந்தவர் தனது வாழ் நாளில் 36 சத்திர சிகிச்சைகளுக்கு முகம் கொடுத்துள்ளார் என கூறப்படுகின்றது.

No comments

Powered by Blogger.