Header Ads



இந்த மாவீரனை விமர்சிப்பதற்கு, வெட்கப்பட வேண்டும்


இந்தியா உ.பியில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மஜ்லீஸ் கட்சி போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வியை தழுவியது.

அசத்துத்தின் உவைஸியின் இந்த தோல்வியை பிஜேபி, RSS கூட்டத்தினர் விமர்சித்தால் நாம் நிச்சயம் மகிழ்ந்து கொள்ளலாம்.

ஆனால் சில முஸ்லிம்கள் விமர்சிப்பது கேவலமாக தெரிகிறது.

அரசியலில் வெற்றி தோல்வி என்பது சகஜமானது. காயிதே மில்லத், கக்கன், காமராஜர் போன்ற பெரும் தலைவர்களே தோல்வியை தழுவியுள்ள நிலையில் அசத்துத்தின் உவைஸியின் தோல்வி என்பது வழமையான தோல்வியாகும்.

ஆயிரம் வெற்றிகள் தரும் படிப்பினையை விட ஒரு தோல்வி ஆயிரம் படிப்பினையை தரும் !!

ஒவ்வொரு தோல்வியும் மனிதனை செதுக்கும்.

தோல்விக்கு பயந்து வீட்டில் முடங்கியவனை விட வீதியில் இறங்கி முட்டி மோதி தோல்வியை சந்தித்தவன் வீட்டில் முடங்கியவனை விட வீரனாவான்.
தனி ஒரு மனிதனாக ஒட்டுமொத்த இந்தியாவையும் தன்னை நோக்கி திரும்ப வைத்து, ஒட்டுமொத்த இந்துத்துவ பாசிச கூட்டத்திற்கும் சிம்ம சொப்பனமாக இருந்து வரும் அசத்துத்தின் உவைஸியை பற்றி பேசுவதற்கு கூட தகுதி வேண்டும்.

இஸ்ரத் ஜஹானின் அண்ணனாக பேசுகிறேன், இஹ்சான் ஜாப்ரியின் மகனாக பேசுகிறேன் என்று பாராளுமன்றத்தில் பேசிய மாவீரனை விமர்சிப்பதற்கு வெட்கப்பட வேண்டும்.

நன்றி கெட்டத்தனமாக பேசுவது கேவலமான செயல்.

2 comments:

  1. இந்த மாவீரனை நாமும் வாழ்த்துவோம், அவருக்காக நாமும் துஆ செய்வோம்.

    ReplyDelete
  2. Uttara Pradesh Muslims must regret for their ignorance not to select the Majlis party in recently concluded state election.

    ReplyDelete

Powered by Blogger.