Header Ads



நான் பேஸ்புக் பார்ப்பது இல்லை, அதனால் ஒரு பயனும் இல்லை - மைத்திரிபால

எமக்கிடையில் பிரிவினையை ஏற்படுத்த வடக்கு, தெற்கு மற்றும் வெளிநாடுகளில் உள்ள நிறைய பேர் சதி செய்கின்றனர். இதனை பேஸ்புக் ஊடாக அவதானிக்க முடியும். குறிப்பாக நான் பேஸ்புக் பார்ப்பதும் இல்லை. இது போன்ற விடயங்களை தொடர்ந்து பார்ப்பதால் ஒரு பயனும் இல்லை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழில் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்துக்கு சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன “ஜனாதிபதிக்கு தெரிவியுங்கள்” எனும் மக்கள் குறைகேள் நிலையத்தை திறந்து வந்துவிட்டு உறையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

எம்மை பிரிப்பதற்கு வடக்கிலும் தெற்கிலும் நாட்டுக்கு வெளியிலும் பல செயற்படுகின்றனர். 

இதனை பேஸ்புக் ஊடாக அவதானிக்க முடியும். நான் பேஸ்புக் பார்ப்பதில்லை. அதனால் ஒரு பயனும் இல்லை. எனவே நாம் அனைவரும் பேதம் மறந்து ஒன்றாக செயற்பட வேண்டும். மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படாமல் இருக்க வேண்டும்.

மேலும் இரு மாதங்களுக்கு ஒரு தடவை அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை தனது அதிகாரிகளுடன் அனைத்து அமைச்சர்களும் யாழ்ப்பாணத்துக்கு  செல்ல வேண்டும் என உத்தரவு பிரப்பிப்பேன். இதன் மூலமும் உங்கள் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள முடியும் என்றார்.

3 comments:

  1. Mr.President, Don't forget that your had win Presidential election on 2015 with help of social media!!

    ReplyDelete
  2. Face book துணையால்தால் மஹிந்த தோல்வியும், உங்கள் வெற்றியும் அமைந்தது வேலைப்பழுவால் மறந்துவிட்டார் நமது ஜனாதிபதி

    ReplyDelete
  3. இவர் ஒரு சரியான சந்தர்ப்பவாத அரசியல்வாதி என்பதை நிருபித்து விட்டார். மேலும் எவனுடைய முதுகில் ஏறியாவது ஆட்சியை பிடிக்கும் அறிவாளியான அரசியல் வாதிகளும் அவர்களுக்கு ஏறுவதற்கு வசதியாக அதற்கு ஏற்றவாறு வளைந்து முதுகை கொடுக்கும் முட்டாள் போன்ற எம்மவர் இருக்கும் வரைக்கும் அரசியல் வாதிகளின் காட்டில் / வீட்டில் கொண்டாட்டம் தான்

    ReplyDelete

Powered by Blogger.