Header Ads



சந்திரிக்காவுக்கு புதிய பதவி, சம்பளம் இல்லை, ஹெலிகப்டரும் வழங்கப்படும்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவிற்கு புதிய பதவி ஒன்று வழங்கப்பட்டுள்ளது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இன்றைய தினம் -21- பாராளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார். தொடர்ந்து அவர் கருத்து தெரிவிக்கையில்,

தேசிய நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தி தொடர்பிலான காரியாலயத்திற்கு தலைவராக அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

எனினும் அவர் இதற்காக சம்பளம் எதனையும் பெற்றுக் கொள்ளாமல் சேவையாற்றுவார். அவருக்கு அரசினால் அரச கருமங்களுக்காக 2 ஹெலிகப்டர் பயணங்கள் ஏற்பாடு செய்து கொடுக்கப்படும்.

மேலும் அவருடைய பாதுகாப்பு நிமித்தம் வானகங்களும் ஒழுங்கு செய்யப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதிகள் இருவருக்கும் இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது எனவும் பிரதமர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.