Header Ads



இலங்கை கிரிக்கெட் மீது, அர்ஜுணா போர்க்கொடி

தற்போதைய கிரிக்கெட் நிர்ருவாகத்தில் இணைவதற்கு தாம் தயாரில்லையென முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் அணி தலைவரும் , துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சருமாகிய அர்ஜூன ரணதுங்க தெரிவித்தார். அமைச்சர் அர்ஜூன ரணதுங்க கிரிக்கெட் நிர்ருவாகத்தில் இணைந்துக்கொள்ள வேண்டுமென இலங்கை கிரிக்கெட் சபையின் முகாமையாளர் அசங்க குருசிங்க முன்வைத்த கோரிக்கைக்கு முதன் முறையாக பதிலளிக்கையிலேயே அமைச்சர் இக்கருத்தினை வெளியிட்டார். நேற்றைய தினம் (12) உடுகம்பலவில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய வினாக்களிற்கு பதிலளிக்கையிலேயே இக்கருத்தை வெளியிட்டார். அமைச்சர் அர்ஜூன ரணதுங்க மேலும் குறிப்பிட்டதாவது ,  கிரிக்கெட் நிர்ருவாகத்தில் தலையிடுவதன் காரணமாக அசங்க குருசிங்கவினால் தன்னுடைய கடைமைகளை உரியமுறையில் நிறைவேற்றுவதற்கு சந்தர்பம்கிட்டாதென தெரிவித்தார்.

' கடந்த 20 ஆண்டுகளாக இந்நாட்டில் என்ன நடந்ததென அசங்க குருசிங்க அறிந்திருக்கவில்லை. எவ்வாறான அரசியல் தலையீடுகள் முன்னெடுக்கப்பட்டன ? எவ்வாறன திருட்டுச் செயல்கள் இடம்பெற்றன? எவ்வாறான தவறிழைத்த நபர்கள் விளையாட்டில் ஈடுப்பட்டார்கள்?  என அசங்க குருசிங்க அறிந்திருக்கவில்லை. தற்போதைய கிரிக்கெட் நிர்ருவாகிகள் கடமைகளை நிறைவேற்றுவதற்கு அசங்க குருசிங்க , என்னுடைய சகோதர விளையாட்டு வீரருக்கு ஒரு போதும் இடமளிக்கமாட்டார்கள் என்பதை நான் கூறிக்கொள்ள விரும்புகின்றேன். 

நிர்ருவாகத்தில் உள்ளவர்கள் அரசியல் தலையீடுகளை மேற்கொள்கின்றார்கள். அவர்களுடைய நண்பர்களின் பிள்ளைகளிற்கு விளையாட்டில் ஈடுப்படுவதற்கு சந்தர்பம் வழங்குகின்றார்கள். அண்மையிலும் இவ்வாறானதோர் சம்பவம் பதிவாகியது. இந்நடவடிக்கை காரணமாக கிரிக்கெட் நிர்ருவாகத்தின் புகழிற்கு கலங்கம் ஏற்பட்டுள்ளது. தற்பொழு பழைய கிரிக்கெட் வீரர்களை உபயோகித்து தங்களுடைய சேறுகளை மறைக்க முயற்சிக்கும் செயன்முறையொன்று பின்பற்றப்படுகின்றது. எனவே நான் மிகவும் பொறுப்புணர்வுடன் கூறவிரும்புவது யாதெனில் , வீரர்களான அரவிந்த, அசங்க , சனத் ஆகிய அனைவரும் கிரிக்கெட் விளையாட்டில் தவறொன்று இழைக்கப்படுமாயின் அத்தவறை சரிச்செய்ய வேண்டும். இல்லையேல் அதிலிருந்து விலக வேண்டுமென்பதையே நான் விசேடமாக குறிப்பிடுகின்றேன். நான் கிரிக்கெட் நிர்ருவாகத்திற்குள் வரமாட்டேன். விசேடமாக கடந்த கிரிக்கெட் சபை தேர்தல்களின் பொழுது நான் உப தலைவராக செயற்படுவதற்கு தகுதியற்றவரென இவ்வாக்கெடுப்பில் கலந்துக்கொள்வோரினால் தீர்மாணிக்கப்பட்டிருந்தது. எனவே அதன் பின்னர் கிரிக்கெட்டில் தலையிட போவதில்லையென நான் தீர்மாணித்தேன். உலக கிண்ணத்தை வென்ற பலர் இன்று கிரிக்கெட் பயிற்றுவிப்பாளர்களாக செயற்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள். எனவே எதிர்காலத்தில் எம்மாலும் உலக கிண்ணத்தை வெற்றிக்கொள்ளலாம். அதன் பொருட்டே இவ்வீரர்கள் வரவழைக்கப்படுகின்றார்கள். இவ்வீரர்களிற்கு உரிய சந்தர்பங்களை வழங்கி வெற்றிப்பெற வாழ்த்துக்களை தெரிவிக்க வேண்டுமென...' முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்தார். அமைச்சர் மேலும் குறிப்பிட்டதாவது , கிரிக்கெட் நிர்ருவாகத்தில் தலையிடுவதைக் காட்டிலும் துறைமுகத்தின் பொருட்டு  செயலாற்றும் தம்மை சார்ந்ததாகுமென தெரிவித்தார்.

' ஜனாதிபதி மற்றும் பிரதம அமைச்சர் துறைமுகத்தை சுத்தம் செய்யுமாறு கோரியே என்னிடம் பொறுப்புக்களை கையளித்தார்கள். இன்று நான் அச்செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்கின்றேன். திருடர்களை அகற்றியுள்ளேன். தொழிற்சங்க தலைவர்களென கூறி திருட்டுச் செயல்களில் ஈடுப்பட்டவர்களை இன்று பதவிநீக்க வேண்டியேற்பட்டுள்ளது. அதேப்போல் அம்பாந்தோட்டை, கொழும்பின் கிழக்கு முனையம் ஆகியவற்றை இந்நாட்டில் அதிகளவு இலாபமீட்டும் நிலைக்கு தரமுயர்த்த வேண்டும். எனவே கிரிக்கெட் நிர்ருவாகத்திற்குள் வருவதற்கு எனக்கு போதிய நேரமில்லையென ....' அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்தார். 

No comments

Powered by Blogger.