Header Ads



பாங்கு சத்தம், பிரித்­தை­விட சப்­த­மாக கேட்­கி­றது, பௌத்த மக்கள் கோபத்­துக்­குள்­ளா­கி­றார்கள் - ஞான­சார

நாங்கள் முஸ்­லிம்­களின் பள்­ளி­வா­சல்­க­ளுக்கு எதி­ரா­ன­வர்கள் அல்லர். ஆனால் முஸ்­லிம்கள் பள்­ளி­வா­சல்­களைப் பொருத்­த­மான இடங்­க­ளிலே நிர்­மா­ணித்துக் கொள்ள வேண்டும்.

பெரும்­பான்மை மக்கள் வாழும் பிர­தே­சங்­க­ளிலும் பன்­ச­லை­க­ளுக்கு அரு­கிலும் பள்­ளி­வா­சல்கள் அமை­வ­த­னா­லேயே இரு சமூ­கங்­க­ளுக்­கி­டையில் முரண்­பா­டுகள் உரு­வா­கின்­றன.

இன­மோ­தல்­க­ளுக்கும் கார­ண­மா­கின்­றன என பொது­ப­ல­சேனா அமைப்பின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் தெரி­வித்தார். 

கிரு­லப்­ப­னை­யி­லுள்ள பௌத்த மத்­திய நிலை­யத்தில் நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் கலந்து கொண்டு ஊட­க­வி­ய­லா­ளர்­களின் கேள்­வி­க­ளுக்குப் பதி­ல­ளிக்­கை­யிலேயே ஞான­சார தேரர் இவ்­வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் பதி­ல­ளிக்­கையில் தெரி­வித்­த­தா­வது, 

பௌத்த புனித பூமிப் பிர­தே­சங்­களில் பள்­ளி­வா­சல்­களோ, கோயில்­களோ அமைந்­தி­ருக்­கக்­கூ­டாது. இது தம்­புள்ளை புனித பூமி பிர­தே­சத்­துக்கு மாத்­தி­ர­மல்ல,  நாட்­டி­லுள்ள அனைத்து புனித பூமி பிர­தே­சங்­க­ளுக்கும் பொருந்தும். 

தம்­புள்­ளையில் புனித பூமியில் அமைந்­தி­ருக்கும் பள்­ளி­வாசல் அவ்­வி­டத்­தி­லி­ருந்து அகற்­றப்­பட வேண்டும். புனித பூமி பிர­தே­சங்­களில் அமைந்­தி­ருக்கும் பன்­ச­லை­களில் பிரித் ஓதும் போது முஸ்லிம் பள்­ளி­வா­சல்­களின் பாங்கு சத்தம் பிரித்­தை­விட சப்­த­மாக கேட்­கி­றது. இதனால் பௌத்த மக்கள் கோபத்­துக்­குள்­ளா­கி­றார்கள். முஸ்­லிம்கள் மீது  வெறுப்­புக்­குள்­ளா­கி­றார்கள். இது மக்­களின் சக­வாழ்­வுக்கு உகந்­த­தாக இல்லை. 

நான் வாழும் நாவல பிர­தே­சத்தில் பெரும்­பான்மை மக்கள் வாழும் பகு­தியில் பள்­ளி­வா­சல்கள் இருக்­கின்­றன. வெள்­ளிக்­கி­ழ­மை­களில் பள்­ளி­வா­ச­லுக்கு வரும் முஸ்­லிம்­களின் வாக­னங்­க­ளி­னாலும் வாக­னங்கள் தரித்து வைக்­கப்­ப­டு­வ­தாலும் மக்கள் பெரும் அசெ­ள­க­ரி­யங்­க­ளுக்­குள்­ளா­கி­றார்கள்.

இத­னா­லேயே பள்­ளி­வா­சல்கள் பொருத்­த­மான இடங்­களில் ஏனைய சமூ­கங்­க­ளுக்கு இடை­யூறு இல்­லாத வகையில் நிர்­மா­ணிக்­கப்­பட வேண்டும் என்று சொல்­கிறோம். 

தம்­புள்ளை பள்­ளி­வா­ச­லுக்கு அர­சாங்கம் காணி வழங்­கு­வ­தாகக் கூறினால் பேரம் பேசிக் கொண்­டி­ருக்­காது பள்­ளி­வா­சலை இடம்­மாற்றிக் கொள்ள வேண்டும். 

கிழக்கில் முகுது விகாரையைச் சுற்றி முஸ்லிம்கள் இருக்கிறார்கள். விகாரைக்கு அருகில் பள்ளிவாசலும் இருக்கின்றது. இது இன நல்லுறவுக்குப் பாதகமாக அமையலாம். எனவே பள்ளிவாசல்கள் பொருத்தமான இடங்களிலே நிர்மாணிக்கப்பட வேண்டும் என்றார்.

ARA.Fareel

9 comments:

  1. He is again trying to stir-up the Sinhalese again.

    ReplyDelete
  2. அழ்ழாஹ் படைத்த பூமியில் அவனை வன்ங்குவதற்கெ இடமில்லை நிச்சயமாக எல்லொரும் அவனிடமெ செல்லவேண்டியவர்காள் என்பது இவர்களுக்கு விளங்கதா

    ReplyDelete
  3. Where is Muhuthu Vihara.
    Hay Ganasara, remove your Muhuthu Vihara away from our mosque.

    ReplyDelete
  4. பொறுத்தமான இடங்களில் விகாரை களை அமைத்துக்கொள்ள வேண்டும் .

    ReplyDelete
  5. Ganasara. Are you ready to relocate Muthuku?

    ReplyDelete
  6. Iya neenga solvathu sari ungada kathappati moothu maha vihariya suttri eththana singala kudumpam irukkiyya oruththtarum illa appa ean iya priththa saththama podurayal anga muslimkal 100% irukkirankela.

    ReplyDelete
  7. MADAYANDA KATHA....ETHUSARI LOGIC POINT IRUUKA ?????????

    ReplyDelete
  8. yaaa allah nee inda boutha bikkuwikku hidayath kudu illati nasamaki alichi potturu yaa allah ,iwanda atagsasam koodittu podugu ya allah .fir oun a karun a epidi alichiyoo iwanakku aliwa kuduthu ada matra makkalukku padamada wei ya allah .ameen

    ReplyDelete
  9. பௌத்தம் ஒரு சமயமே இல்லை ! ஒரு மகாத்மாவின் "தரிஷனம்" மட்டுமே!
    பின்னே "புனிதப் பிரதேஷம் எப்படி ஓய் சொங்கி

    ReplyDelete

Powered by Blogger.