Header Ads



இறைவனை தவிர்த்து வேறு யாருக்கும், அடிமையாக இருக்க தேவை இல்லை

கருத்து சுதந்திரம் என்ற பெயரில் உலெகங்கும் ஒருவரை மற்றவர் தாக்குவதும் வன்முறைகளை விதைப்பதும் உலெகெங்கும் சாதரண விசயமாகி வருகிறது. கருத்து சுதந்திரம் என்ற போர்வையில் முஸ்லிம்களும் இஸ்லாமும் அதிக விமர்சனங்களை சந்திக்கின்றனர்

கருத்து சுதந்திரமும் மார்க்க சட்டங்களும்” என்ற தலைப்பில் இன்று மக்கா மாநகரில் ஒரு உலக மகாநாட்டை  முஸ்லிம் லீக் நடத்தியது

அதில் சவுதி மன்னரின் உரையை அவரது பிரதி நிதி வாசித்தார். அந்த உரையில் சவுதி மன்னர் சல்மான்

மனித சமூகத்தை நாம் சிறப்பித்துள்ளோம் என்று இறைவன் கூறியுள்ளான்
(அத்யாயம் அல் இஸ்றா வசம் 70)

இறைவனால் சிறப்பிக்க பட்ட மனிதன் இறைவனை தவிர்த்து வேறு யாருக்கும் அடிமையாக இருக்க தேவை இல்லை

மனிதனுக்கு முழு சிந்தனை சுதந்திரத்தை வழங்கியுள்ள இறைவன் தான்

நமக்கு குர்ஆன் ஹதீஸ் போன்ற மார்க்க சட்டங்களை வழங்கியுள்ளான்

இவைகள் ஒரு போதும் சரியான சிந்தனைக்கு முறண்படுவதில்லை

எனவே கருத்து சுதந்திரம் என்ற பெயரில் பொய்யான பகுத்தறிவு வாதத்தையும் நமது மனோ இச்சைகளையும் முன்னறித்தாமல்

குர்ஆனையும் நபி மொழியையும் முன்னிறுத்தி நமது சிந்தனைகளை வளர்த்தவும் பண்படுத்தவும் நாம் கடமை பட்டுள்ளோம்

இவ்வாறு அவரது உரையின் கருத்து அமைந்திருந்தது

No comments

Powered by Blogger.