Header Ads



முதுகெலும்புள்ள முஸ்லிம் தலைவன், இலங்கையில் இல்லை - உலகிற்கு பறைசாற்றிய ஜனாதிபதி


வில்பத்து சரணாலய வனப்பிரதேசத்திற்கு வடக்கே முஸ்லிம்களுக்கு சொந்தமான வெப்பல், கரடிக்குளி, மரிச்சிக்கட்டி ஆகிய பிரதேசங்களையும் தேசிய வனப்பிரதேசங்களாக பிரகடனப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தலில் ரஷ்யாவுக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன கையெழுத்திட்டுள்ளார்.

முதுகெலும்புள்ள ஒரு முஸ்லிம் தலைவன் தானும் இலங்கையில் இல்லை என்பதனை ரஷ்யாவில் இருந்தே உலகிற்கு பறைசாற்றுவது போல் அந்த பிரகடனம் இருக்கிறது.

வடக்கில் ஏற்கனவே தமிழர்களிடம் காணிகளை பறிகொடுத்துள்ள முஸ்லிம்கள் தற்பொழுது இராணுவத்திடம் தமது பூர்வீக இடங்களை பறிகொடுத்துள்ளனர்.

கிழக்கில் கருமலையூற்று, அரிசிமலை, புல்மோட்டை முதல் தீகவாப்பிய பொத்துவில் வரை அபகரிக்கப்பட்டுள்ள முஸ்லிம் காணிகளுக்கும் இதே நிலைமைதான் நடக்கப் போகிறது.

நானா நீயா என முஸ்லிம்களது தலைவர்களாக தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கும் எந்தவொரு அமைச்சருக்கும் முஸ்லிம்களது உரிமைகளை போராடி வென்றெடுக்கும் யோக்கியதை கிடையாது என்பதே உண்மை.

வடகிழக்கில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை நடத்தி மக்கள் தமது உரிமைகளுக்காக நேரடியாக களத்தில் இறங்க வேண்டும்.

எமது போராட்ட அரசியலை சூதாட்ட அரசியலாக மொத்தமாகவும் சில்லறையாகவும் விலைபேசிய கையாளாகா தலைமைகள் இன்று சரணாகதி அரசியல் செய்து கொண்டிருக்கின்றனர். சமூகம் பிச்சை வேண்டாம் நாயைப் பிடி என்ற கையறு நிலையில் அரசியல் அனாதையாக மாறி இருக்கிறது.

-Inamullah Masihudeen-

5 comments:

  1. நீங்கள் சொல்லுவது முற்றிலுமுண்மை.
    இந்த குறுகிய அரசியல் இலபாம் தேடும் தமது அரசியல் தலைவர்களுக்கு எங்கே நேரமிருக்கிறது இவைகளை சிந்திக்க. அவர்களுக்கு தத்தமது கட்சிகளை மறுசீர்ரமைக்கவும் தமக்கு ஓத்து வராதவர்களை கட்சியைவிட்டு எவ்வாறு தூக்கியெறிவது பற்றி சிந்திக்கவும்தான் காலம் போதுமானதாக இருக்கிறது. இவர்ஹளை நம்பி நாங்கள் எதையும் எதிர்பார்க்க முடியாது. இவர்களது ஈகோ இவர்களை ஒன்று சேரவிடாது. அரசியல் பேய்கள்.

    ReplyDelete
  2. நமது மதிப்புக்கும் மரியாதைக்குமுரிய முஸ்லிம் தலைவர்களே இன்னுமேன் மௌனம். இதற்கு ஏதாவது விளக்கமிருக்கிறதா?

    ReplyDelete
  3. அவர்களை குறைசொல்லி குற்றமில்லை, அவர்களுக்கு மீண்டும் மீண்டும் ஓட்டுப்போட்டும் நம்ம புத்தி எங்க போச்சு?

    ReplyDelete
  4. எங்கள் அரசியல்வாதிகள் cd தேடி கொண்டு இருக்கின்றார்கள்

    ReplyDelete
  5. தமிழ் தலைமைகள் தமிழ் மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றும் அரசு உருவாகும் வரைக்கும் பாராளுமன்றத்தை பகிஸ்கரித்து மக்கள்பிரதிநிதிகளாய் பாராளுமன்றத்துக்கு வெளியிலிருந்து கொண்டு தமிழ் மக்களின் பிரச்சினைகளை உலகமயமாக்கி இன்று அவர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றி கொண்டு வருகிறது முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருக்கின்ற நீங்கள் உங்களால் ஏன் பாராளுமன்றத்தை பகிஸ்கரித்து அரசாங்கத்தை ஆட்டம் காண வைக்க உங்களுக்கு வக்கில்லையா? நீங்கள் அனைவரும் அள்ளாஹ்வை அஞ்சி கொள்ளுங்கள்

    ReplyDelete

Powered by Blogger.