Header Ads



விடை பெறுவாரா மஹிந்த..?

-Tm-

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசியல் ரீதியாக தீர்மானமிக்க முடிவினை எடுக்கவுள்ளதாக கொழும்புத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஜனாதிபதி தேர்தல் போது ஏற்பட்ட தோல்வி மஹிந்தவின் இன்றும் தொடர்கதையாகவே உள்ளது. அவரினால் எந்தவொரு வலுவான அரசியல் நடவடிக்கைகையும் முன்னெடுக்க முடியவில்லை. மைத்திரி - ரணில் தலைமையிலான வலுவான கூட்டணி இதற்கு பிரதான காரணமாக உள்ளது.

இந்நிலையில் அரசியல் திட்டங்கள் செயற்படுத்திக் கொள்ள முடியாமை, கூட்டு எதிர்க்கட்சி மக்கள் மத்தியில் செல்ல முடியாமை உட்பட பல விடயங்களினால் மஹிந்த மனரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இவ்வாறான நெருக்கடியான நிலையில் அரசியல் நடவடிக்கைககளிலிருந்து ஓய்வு பெற மஹிந்த திட்டமிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நாமலுக்காக தான் அரசியல் செய்வதில் பயனில்லை என்பதனை மஹிந்த நன்கு புரிந்து கொண்டுள்ளார். இதன் காரணமாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையுடன் இணைந்து போகும் முடிவினை மஹிந்த எடுத்துள்ளார்.

சுதந்திர கட்சியில் இருந்து பிளவுபட்டுள்ள கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்களை மீண்டும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையின் கீழ் செயற்பட வைக்கும் பேச்சுவார்த்தையில் மஹிந்த ஈடுபட்டுள்ளார்.

இதனூடாக தனது நற்பெயரை பாதுகாத்துக் கொள்வதற்கும், குடும்பத்தை பாதுகாத்துக் கொள்வதற்கும் இணக்கப்பாட்டிற்கு வருவதற்கு தயாராக உள்ளதாக குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த இரண்டு வருடங்களாக தனது தலைமைத்துவத்தில் கூட்டு எதிர்க்கட்சியினால் மேற்கொள்ளப்பட்ட அனைத்து அரசியல் பேரணி மற்றும் செயற்பாடுகளின் ஆய்வு அறிக்கைகள் மஹிந்தவை பெரிதும் காயப்படுத்தியுள்ளது.

இவ்வாறான நிலை முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை நம்பிருக்கும் ஆதரவாளர்களுக்கு ஏற்படுத்தும் அநீதியே தவிர நன்மையல்ல என கூட்டு எதிர்க்கட்சியின் அரசியல் குழு பிரதானி சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் தேர்தல் இன்றி நாளுக்கு நாள் பல்வேறு தலைப்பின் கீழ் பேரணி நடத்துவதன் ஊடாக தன்னை பின்பற்றுபவர்களுக்கு அரசியல் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்த முடியாதெனவும், நாளுக்கு நாள் நபர்களுக்கு அதிகாரங்கள் கனவாகியுள்ளதென மஹிந்தவினாலேயே சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதற்கமைய கூட்டு எதிர்க்கட்சியின் சுதந்திர கட்சி உறுப்பினர்களுக்கு நியாயமாக அமைச்சு பதவிகள் உட்பட சில பதவிகள் வழங்குவது என்றால் தான் அரசியலில் இருந்து அமைதியாக விலகிக் கொள்ள விரும்புவதாக மஹிந்த தெரிவித்துள்ளார். இதற்கிணங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் அவரது தரப்பினருடன் கலந்துரையாடலுக்கு செல்லுமாறு மஹிந்த ஆலோசனை வழங்கியுள்ளார்.

மஹிந்தவுக்கு தற்போது 70 வயதாகிறது. அவர் மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்ற மஹிந்தவுக்கு சிறந்த முறையில் ஓய்வு எடுக்குமாறு வைத்தியர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர். அதற்கமைய மஹிந்த தனது அரசியல் ஓய்வு குறித்த முடிவை எடுத்துள்ளார்.

பெரும்பான்மை மக்களின் நிஜ ஹீரோவாக கருதப்படும் மஹிந்த ராஜபக்ஷவின் ஓய்வு முடிவு, கொழும்பு அரசியல் மட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்னொரு முறை ஜனாதிபதியாக போட்டியிடும் வாய்பில்லாத மஹிந்த, இலங்கையின் அடுத்த பிரதமராக தான் பதவி வகிக்க போவதாக பகிரங்கமாக அறிவித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. It will do good for Sri Lanka if this old rubbish MR gets out of politics completely.

    ReplyDelete

Powered by Blogger.