Header Ads



டெங்குவுக்கு குழந்தையை பறிகொடுத்தவர், வைத்தியசாலை மீது குற்றச்சாட்டு..!

திருகோணமலையில் டெங்கு நோய் தாக்கத்தினால் 6 வயது மாணவி அஞ்சனா உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியிருந்தது.

இந்த நிலையில் சிறுமியின் தந்தை மகளின் மரணம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்,

திருகோணமலை பொது வைத்தியசாலையில் அதிக டெங்கு நுளம்புகள் காணப்படுவதனாலேயே தமது புதல்விக்கு இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. இது லட்சத்தில் ஒருவருக்கு வரக்கூடியது.

இவ்வாறான சூழலில் டெங்கு நோயை கட்டுப்படுத்துடுவதற்கு போதுமான வசதி அங்கு இல்லை. குறிப்பாக போதியளவில் மனிதவளமோ, இயந்திர உபகரண வளமோ திருகோணமலை பொதுவைத்தியசாலையில் இல்லை என அவர் குற்றம் சுமத்தினார்.

இதனை கருத்திற்கொண்டு தற்போதாவது டெங்கு நுளம்பு பெருக்கத்தினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர இராணுவத்தின் உதவியை நாடி, மத்திய அரசாங்கம் செயற்பட வேண்டும் என உருக்கமான கோரிக்கையை தந்தையான உதயராஜன் முன்வைத்துள்ளார்.

மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் மக்களுக்கு அதிகளவில் விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டிய அவசியம் அனைவருக்கும் உள்ளது என தெரிவித்த அவர், இதை கட்டுபடுத்த அரசியலை தவிர்த்து ஒன்றுபட்டு உழைக்கவேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.