Header Ads



சவுதி இளவரசர், டிரம்புடன் விசேட பேச்சுவார்த்தை

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை, சவுதி அரேபிய இளவரசர் முஹம்மது பின் சல்மான் சந்தித்து விசேட பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தவுள்ளார்.

சவுதியில் எழுந்துள்ள பொருளாதார மந்த நிலையை தடுப்பதற்கு, அமெரிக்க முதலீடுகளை அதிகரிக்கச் செய்தல், இருநாட்டு உறவுகளை மேம்பட செய்தல், உள்ளிட்ட விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு, சவுதி இளவரசர் அமெரிக்கா சென்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.

மேலும் சர்வதேச சந்தையில் பெற்றோலின் ஏற்றுமதி விலை தொடர்ந்து சரிவடைந்து வருவதால், எண்ணெய் வளத்தை மட்டுமே நம்பியுள்ள மத்திய கிழக்கு நாடுகள் பொருளாதார மந்த நிலையை எதிர் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.  

இந்நிலையில் சவுதியில் பொருளாதார நிலைமைகளை கட்டுபடுத்துவதற்கு அந்நாட்டு அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீட்டை குறைத்ததோடு, கடந்த வருட பட்ஜெட்டில், பல வருடங்களுக்கு பிறகு மின்சார கட்டணம் மற்றும் பெற்றோல் விலையை அந்நாடு உயர்த்தியிருந்தது. 

மேலும் எதிர்வரும் காலங்களில் நிலவவுள்ள, பொருளாதார நெருக்கடிகளை சமாளிப்பதற்காக சுமார் 140,000 கோடிகளை சர்வதேச வங்கிகளிடமிருந்து கடனாக கோரியுள்ளது.

அத்தோடு சவுதியில் அதிக முதலீடுகளை செய்து வரும் அமெரிக்காவின் முதலீடுகளை அதிகரித்தல், சவுதி அரேபியா அரசிற்கு சொந்தமான அராம்கோ என்னை நிறுவனத்தை விற்பனை செய்தல் என்பனவற்றை, கடந்தாண்டு அந்நாட்டு பாராளுமன்ற்றத்தில் பெறப்பட்ட பொருளாதார புனரமைப்பு செயற்பாடுகளுக்கான அங்கீகாரத்தின் அடிப்படையில் அந்நாட்டு இளவரசர் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

1 comment:

  1. Saudi Arabia fell into the hole which is dug itself for Iran and Russia.Saudi leaders were made to believe that if Oil prices gone down Iran and Russia's economy will go down.So to do that it sold oil to America for law price and doubled it's production to cover the loosing money.So as supply increased price gone down. now it is struggling make both ends meet.But it's leaders had no knowledge to understand that it is digging it's own grave.Saudi Arabia must understand that it is used by enemy to destroy Islamic ideology,Islamic economy and Muslims lives and property. This three prong attack carried itself against Muslim world.

    ReplyDelete

Powered by Blogger.