Header Ads



புர்காவுடன் வரும், இஸ்லாமிய பெண்கள் குற்றவாளிகளா..?

ஐரோப்பிய நாடுகளில் உள்ள நிறுவனங்களில், மதத்தை வெளிப்படுத்தும் அடையாளங்களை ஊழியர்கள் அணிவது தவறு என ஐரோப்பிய உச்ச நீதிமன்றம் விதித்து தீர்ப்பிற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஐரோப்பிய உச்ச நீதிமன்றம் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று ஒரு தீர்ப்பை வெளியிட்டது.

அதில், ‘ஐரோப்பிய நாடுகளில் உள்ள நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து மதத்தை சேர்ந்த ஊழியர்கள் தங்களது மதத்தை வெளிப்படுத்தும் அடையாளத்தை அணிவது தவறு’ என தெரிவிக்கப்பட்டது.

மேலும், இதுபோன்ற விவகாரங்களில் ஈடுப்படும் ஊழியர்களை நிறுவனங்கள் பணியை விட்டு நீக்கினாலும் அது சட்டத்திற்கு எதிரான செயல் அல்ல’ என ஐரோப்பிய உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பானது பல்வேறு மதத்தினர் மத்தியில் பலத்த கண்டனத்தை ஏற்படுத்தி வருகிறது.

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த Nadia Khedachi(25) என்ற இஸ்லாமிய பெண் அங்குள்ள இஸ்லாமிய சமூக பெண்களின் நல அமைப்பில் உறுப்பினராக பணியாற்றி வருகிறார். ஐரோப்பிய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை இவர் கடுமையாக எதிர்த்துள்ளார்.

’இந்த தீர்ப்பானது இஸ்லாமியர்கள் மீதான நேரடி தாக்குதல் போலவே நான் உணர்கிறேன். பிரான்ஸ் நாட்டில் சுதந்திரமும், பெண் உரிமையையும் பெருமையாக பேசப்படுகிறது. ஆனால், இதே நாட்டில் பிறந்து வளர்ந்த ஒரு இஸ்லாமிய பெண்ணின் அடிப்படை உரிமைகளை பறிப்பது போன்று இந்த தீர்ப்பு அமைந்துள்ளது.

இந்த தீர்ப்பின் மூலம் நான் எனது புர்காவை நீக்க வேண்டும்....அல்லது எனது பணியை துறக்க வேண்டும். அதாவது, இந்த இரண்டுமே எனது அடிப்படை உரிமைகள் தான். ஆனால், இந்த இரண்டையும் இழக்கும் வகையில் தான் இந்த தீர்ப்பு அமைந்துள்ளது.

பணிபுரியும் ஓர் இடத்தில் என்னுடைய மத அடையாளத்துடன் வருவதால் என்ன ஆபத்து ஏற்பட போகிறது? சக ஊழியர்களுக்கு இதனால் அவமானம் ஏற்படப்போகிறதா?

என்னுடைய அடையாளத்துடன் என்னை பொதுமக்கள் பார்க்க வேண்டும் என எண்ணுவதில் என்ன குற்றம் இருக்கிறது? இவ்வாறு செய்வதால் இது தேசியக் குற்றம் ஆகிவிடுமா?

பணிபுரியும் இடத்திற்கு புர்காவுடன் வரும் அனைத்து இஸ்லாமிய பெண்களும் குற்றவாளிகளா? சமூகத்தில் இஸ்லாமியர்கள் மீது ஏற்கனவே பிரிவினைவாத விமர்சனங்கள் எழுந்து வருகிறது.

ஐரோப்பிய உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால் தற்போது சட்டப்பூர்வமாகவே எங்கள் சமூகத்தினரை மோசமாக விமர்சனம் செய்ய வழிவகை செய்துள்ளது.

இந்த தீர்ப்பு எங்கள் சமூகத்தினரை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது மறுக்க முடியாது உண்மை’ என Nadia Khedachi கருத்து தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. முதலில், நீங்கள் வெளியிட்டிருக்கும் படம் புர்கா அல்ல. முகம் மூடுவதுதான் புர்கா. ஆனால், புர்கா இஸ்லாத்தில் உள்ள அம்சம் என்பதை யாராவது ஆதாரத்துடன் வெளியிட்டால் நன்று.

    ReplyDelete

Powered by Blogger.