Header Ads



கடன் வாங்குவதை நிறுத்திக்கொள்ள, அரசாங்கம் தீர்மானம்

அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு  எந்தப் புதிய கடனையையும் வாங்குவதை நிறுத்திக் கொள்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்திருப்பதாக சிறிலங்கா நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

2018ஆம் ஆண்டில், மீளச் செலுத்த வேண்டிய கடன்தொகை 5.6 பில்லியன் டொலரை எட்டியுள்ள நிலையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதனால் புதிய கடன்களைப் பெற்று மேற்கொள்ளப்பட வேண்டிய பாரிய திட்டங்களை இடைநிறுத்துமாறு வீதி அபிவிருத்தி அதிகாரசபை, நகர அபிவிருத்தி அதிகார சபை போன்ற அரச நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

கடன்களைப் பெறுவதற்குப் பதிலாக, பொது-தனியார் கூட்டு மற்றும் கட்டி, செயற்படுத்தி, கைமாற்றம் செய்யும் அடிப்படையிலான திட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.

இத்தகைய திட்டங்களுக்கு காணிகள் மட்டும் குத்தகைக்கு வழங்கப்பட்டு, பங்கு உறுதி செய்யப்படும். எனினும் புதிய கடன்கள் பெறப்படாது.

மலேசியா, ஜப்பான், இந்தோனேசியா போன்ற நாடுகள் இதேபோன்ற அபிவிருத்தி மூலோபாயத்தை பயன்படுத்தியே தமது பொருளாதாரங்களை பலப்படுத்திக் கொண்டன.

நாம் அத்தகைய முறையை நோக்கி நகராவிடின், கடனைத் தீர்க்க முடியதமல், புதிய கடன்களை பெற வேண்டிய நிலைதான் ஏற்படும்.

குறைந்தது மூன்று ஆண்டுகளுக்கு வெளிநாட்டு கடன்களைப் பெறுவதை நிறுத்தினால் தான், நாடு பொருளாதார ரீதியில் தப்பிக்க முடியும்.” என்றும் அவர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.