Header Ads



ஜனாதிபதியும், பிரதமரும் மரண வீடுகளுக்கு செல்வதை எதிர்க்கிறேன் - ரஞ்சன்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் மரண வீடுகளுக்கு செல்வதனை எதிர்ப்பதாக பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

மரண வீடுகளுக்கு செல்லும் நேரத்தில் ஜனாதிபதியும் பிரதமரும் நாட்டுக்கு பாரியளவில் சேவையாற்ற முடியும்.

ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் வேறும் வேலைகளை செய்ய முடியாத வகையில் நூல் வெளியீடுகள், கலைஞர்களை பார்வையிடச் செல்லல், திருமண நிகழ்வுகளில் பங்கேற்றல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளுக்கு அழைப்பு விடுக்கப்படுகின்றது.

ஜீ7 நாடுகள் மாநாட்டுக்கு செல்வது நாட்டுக்கு பயனுள்ளது, ரஸ்யா செல்கின்றோம், இங்கிலாந்து செல்கின்றோம், நரேந்திர மோடி இங்கு வருகின்றார் அதில் பயனுள்ளது.

எனினும் மரண வீடுகளுக்கு செல்வதில் பயனில்லை என்றே கருதுகின்றேன்.

யாழ்ப்பாணம், திருகோணமலையில் மரண வீடு ஒன்றுக்கு செல்வதற்கு 4-5 லட்சம் ரூபா செலவாகின்றது.

இதனைக் கூறுகின்றேன் என்பதனால் என்னுடன் ஜனாதிபதியும் பிரதமரும் கோபித்துக் கொள்வார்களோ தெரியவில்லை.

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பரக் ஒபாமா மிகவும் வரையறுக்கப்பட்ட மரண வீடுகளுக்கு மட்டுமே சென்றிருந்தார்.

எமது கலாச்சாரத்தின் அடிப்படையில் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் வேறு பணிகளில் ஈடுபட முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளதாக பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்த்துள்ளார்.

No comments

Powered by Blogger.