March 08, 2017

முஸ்லிம்கள் குறித்து, மஹிந்த ராஜபக்ஸ நேற்று கூறியவை..!

என்­னி­ட­மி­ருந்து முஸ்­லிம்­களை நிரந்­த­ர­மாக பிரிப்­ப­தற்கு வெளிநாட்டு சக்­திகள் சதி செய்­கின்­றன என தெரி­வித்த முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ, இந்த சூழ்ச்­சி­களில் சிக்கி பலி­யாக வேண்டாம் எனவும் முஸ்­லிம்­களிடம் வேண்­டுகோள் விடுத்தார்.

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ­வுக்கும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண முஸ்லிம் பிர­தி­நி­திகள் சில­ருக்­கு­மி­டை­யே­யான சந்­திப்­பொன்று நேற்று -07- மாலை கொழும்பிலுள்ள மஹிந்­தவின் இல்­லத்தில் இடம்­பெற்­றது. 

இதில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றும்­போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரிவித்தார். 

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
எனது ஆட்­சிக்­கா­லத்தில் முஸ்­லிம்­களின் பாது­காப்பு உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தது. அத்­துடன் அவர்­க­ளுக்­கான சகல உத­வி­களும் வழங்­கப்­பட்­டன. இதனை எவ­ராலும் மறுக்க முடி­யாது. 

நான் வடக்கு கிழக்கில் பல பள்­ளி­களை புன­ர­மைத்­தி­ருக்­கிறேன். அத்­துடன் நாட்டில் புதி­தாக 4 பள்­ளி­களை நிர்­மா­ணித்துக் கொடுத்­தி­ருக்­கிறேன். 

இவ்­வா­றா­ன­தெரு நிலையில் இன்று முஸ்­லிம்­களை என்­னி­ட­மி­ருந்து நிரந்­த­ர­மாக பிரப்­ப­தற்கு வெ ளிநாட்டு சக்­திகள் சதித்­திட்­டங்­களை தீட்­டு­கின்­றன. அதற்­காக பெரு­ம­ளவில் நிதி ஒதுக்­கப்­ப­டு­கின்­றது. 

முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக மேற்­கொள்­ளப்­படும் இந்த சூழ்ச்­சிக்கு யாரும் பலி­யா­கி­வி­டக்­கூ­டாது. அவர்கள் இந்த சூழ்ச்­சி­யி­லி­ருந்து தங்­களை பாது­காத்­துக்­கொள்ள வேண்டும். 

அத்­துடன் எனது ஆட்­சியில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக எந்த செயற்­பா­டு­களும் இடம்­பெ­ற­வில்லை என உறு­தி­யாக கூறிக்­கொள்ள விரும்­பு­கிறேன்.

வடக்கு கிழக்கு இணைப்பு
வடக்கு கிழக்கை இணைப்­ப­தற்கு ரவூப் ஹக்­கீமே பிர­பா­க­ர­னுடன் ஒப்­பந்தம் செய்தார். வடக்கும் கிழக்கும் இரு­வேறு மாகா­ணங்­க­ளாகும். அவை இரண்­டிற்கும் ஒரே அள­வி­லான அபி­வி­ருத்­திகள் மேற்­கொள்­ளப்­பட வேண்டும் என்­பதே எமது நிலைப்­பா­டாகும். 

முஸ்­லிம்­க­ளுக்கு கெள­ரவம்
எனது ஆட்­சியில் முஸ்­லிம்­க­ளுக்கு கெள­ரவம் அளிக்­கப்­பட்­டது. எனது அமைச்­ச­ர­வை­யி­லேயே அதி­க­ள­வி­லான முஸ்­லிம்கள் அங்கம் வகித்­தனர். பிர­தி­ய­மைச்­சர்­க­ளா­கவும் சிரேஷ்ட அமைச்­சர்­க­ளா­கவும் அமைச்­ச­ரவை அந்­தஸ்­தற்ற அமைச்­சர்­க­ளா­கவும் நிய­மிக்­கப்­பட்­டனர். 

மீள்­கு­டி­யேற்றம்
வடக்கில் அதி­க­ள­வான முஸ்­லிம்கள் எனது ஆட்சிக் காலத்­தி­லேயே மீள்­கு­டி­யேற்­றப்­பட்­டனர். ஆனால் இன்­றைய நல்­லாட்­சியில் வடக்கின் மீள்­கு­டி­யேற்­றங்கள் ஸதம்­பித்துப் போயுள்­ளன. 

தம்­புள்ளை விவ­காரம்
தம்­புள்ளை பள்­ளி­வா­ச­லுக்கு 40 பேச்சஸ் காணி தரு­வ­தாக சொன்னோம். அந்த காணியில் பள்­ளியை நிர்­மா­ணித்­துக்­கொள்­வதே நல்­லது என முஸ்­லிம்­க­ளிடம் வேண்­டிக்­கொள்­கிறேன்.

அன்று நாம் காணி தரு­வ­தாக குறிப்­பிட்டோம். அதனை நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. தம்புள்ளை விகாராதிபதியும் அவ்வாறு காணி வழங்கப்படுவதற்கு இணக்கம் தெரிவித்திருந்தார். அதனை நீங்கள் மறுத்தீர்கள். 

இன்று பள்ளியை புதிய இடத்திற்கு மாற்றிக்கொள்வதன் மூலம் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ளலாம் என்றார்.

ARA.Fareel

5 கருத்துரைகள்:

Appadiya Shangazi, Apita Danne Nene!! Api Moda Gonnu, Jaraapassalage Leva kanne nehe!

நாங்கள் முட்டாள்கள்தான் ஆனாலும்
நீங்கள் நினைக்கின்ற அளவு பெறிய
முட்டாள்கள் இல்லை சார்

நாங்கள் முட்டாள்கள்தான் ஆனாலும்
நீங்கள் நினைக்கின்ற அளவு பெறிய
முட்டாள்கள் இல்லை சார்

Post a Comment