March 12, 2017

முஸ்லிம் அரசியலின் சீரழிவு நிலை

-விடிவெள்ளி பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கம்-

முஸ்லிம் அர­சியல் அரங்கில் தற்­போது இடம்­பெ­று­கின்ற நிகழ்­வுகள் ஆரோக்­கி­ய­மா­ன­தாகத் தெரி­ய­வில்லை. தனி நபர்­களின் விவ­கா­ரங்­க­ளையும் அவர்­க­ளது நலன்­க­ளையும் வாக்­கு­றுதி மீறல்­க­ளையும் மையப்­ப­டுத்­தி­ய­தா­கவே முஸ்லிம் அர­சியல் பிர­தி­நி­தி­களின் நிகழ்ச்சி நிரல்கள் அமையப் பெற்­றுள்­ளன.

ஒரு­வ­ரை­யொ­ருவர் குற்­றம்­சாட்­டு­வதும் அதற்கு விளக்­க­ம­ளிப்­பதும் அதற்­காக எதி­ரெதிர் கூட்­டங்கள் நடத்­து­வதும் என முஸ்லிம் அர­சியல் வேறொரு தளத்தில் தடம்­மாறிப் பய­ணித்துக் கொண்­டி­ருக்­கி­றது என்­பதே யதார்த்­த­மாகும்.

குறிப்­பாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிஸ் கட்­சிக்குள் எழுந்­துள்ள உட்­பூசல் இன்று சந்தி சிரிக்கும் நிலையை எட்­டி­யி­ருக்­கி­றது. ஒரு சாரார் தலை­வரின் கடந்த கால தனிப்­பட்ட வாழ்க்­கையை தொடர்­பு­ப­டுத்­திய குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைத்து பிர­சாரம் செய்து வரு­கின்ற நிலையில் மற்­றொரு சாரார் கட்­சியைக் காப்­பாற்­றுதல் என்ற போர்­வையில் கூட்­டங்­களை நடத்தி வரு­கின்­றனர்.

இவற்­றுக்கு நடுவே தான் எதை­யுமே கண்­டு­கொள்ளப் போவ­தில்லை என்ற பாணி­யிலும் நான் அப்­ப­டித்தான் இருப்பேன் என்ற தொனி­யிலும் கட்சித் தலை­வரின் கருத்­துக்கள் வெளிப்­பட்டு வரு­கின்­றன.

மறு­புறம் முஸ்லிம் காங்­கி­ர­ஸுக்கு வெளியே உள்ள அதன் எதிர்த் தரப்­புகள் தமது வாய்க்கு அவல் கிடைத்­தது போன்று இந்த விவ­கா­ரங்­களைப் பேசு­பொ­ரு­ளாக்கி வரு­கின்­றன. அதிலும் குறிப்­பாக மேற்­சொன்ன தரப்­பு­களின் ஆத­ர­வா­ளர்கள் சமூக வலைத்­தங்­களில் வெளி­யிடும் கருத்­துக்­களும் பிடிக்கும் சண்­டை­களும் மிகவும் மோச­மான முறை­யிலும் இஸ்­லா­மிய வரை­ய­றை­களை மீறு­வ­தா­கவும் அமைந்­துள்­ளமை கவ­லைக்­கு­ரி­ய­தாகும்.

அல்­குர்­ஆனை யாப்­பாகக் கொண்ட அர­சியல் என்ற பெயரில் முன்­னெ­டுக்­கப்­படும் இலங்­கையின் தனித்­துவ முஸ்லிம் அர­சியல் முற்­றிலும் அல்­குர்­ஆ­னுக்கும் சுன்­னா­வுக்கும் மாற்­ற­மான முறை­யி­லேயே பய­ணித்துக் கொண்­டி­ருக்­கி­றது என்­ப­தற்கு அக் கட்­சி­களின் உறுப்­பி­னர்­களே இன்று சாட்சி பகர்­கி­றார்கள்.

அண்­மையில் மு.கா. தலை­வ­ருக்கு அக் கட்­சியின் உயர்­பீட உல­மாக்கள் எழு­திய கடிதம் ஒன்றில் தமது கட்­சியின் பிர­தி­நி­திகள் இஸ்­லா­மிய ஷரீஆ வரம்­பு­களை மீறும் வகையில் செயற்­படக் கூடாது என்­பதை தெளி­வு­ப­டுத்­தி­யி­ருந்­தமை இதற்கு சான்­றாகும்.

எனினும் துர­திஷ்­ட­வ­ச­மாக முஸ்லிம் அர­சி­யலின் போக்கு சமூ­கத்தின் எதிர்­காலம் குறித்த நம்­பிக்­கையை அறவே இல்­லாமல் செய்­வ­தா­கவே அமைந்­துள்­ளது. முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள் தமது பத­விகள் , தனிப்­பட்ட நலன்கள், தமது குடும்ப உறுப்­பி­னர்­களின் நலன்கள் என ஒட்­டு­மொத்­த­மாக சுய­நலன் கொண்­ட­தா­கவே தமது செயற்­பா­டு­களை அமைந்­தி­ருப்­பது முஸ்லிம் அர­சி­ய­லுக்கே பெரும் சாபக் கேடாகும்.

இன்று முஸ்லிம் சமூகம் முன்­னரை விடவும் பாரிய சவால்­களை எதிர்­கொண்­டுள்­ளது. அர­சி­ய­ல­மைப்பு திருத்தம் ,எல்லை நிர்­ணயம் , தேர்தல் மறு­சீ­ர­மைப்பு, பயங்­க­ர­வாத தடுப்புச் சட்டம் உள்­ளிட்ட பல பிர­தான தேசிய அர­சியல் நகர்­வுகள் இடம்­பெற்றுக் கொண்­டி­ருக்­கையில் அவை பற்றிக் கிஞ்­சித்தும் கவ­லைப்­ப­டாது மேற்­சொன்ன விட­யங்­க­ளின்பால் முஸ்லிம் சமூ­கத்தின் கவனம் திசை திருப்­பப்­பட்­டி­ருக்­கின்­றமை எந்த வகை­யிலும் ஏற்றுக் கொள்ள முடி­யா­த­தாகும்.

என­வேதான் முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள் தமது குடுமிச் சண்­டை­களை ஒரு­புறம் வைத்­து­விட்டு சமூ­கத்தின் நலன்களுக்காக பாடுபட முன்வர வேண்டும். அதற்கான அழுத்தங்களை முஸ்லிம் அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்களும் சிவில் சமூக சக்திகளும் வழங்க வேண்டும்.

வெறுமனே தலைமைகள் சொல்வதற்கெல்லாம் தலையாட்டுகின்ற குருட்டு ஆதரவாளர்களாக நாம் இருப்போமானால் நாளை அதற்காக இறைவனிடம் அனைவருமே பதில் சொல்ல வேண்டி வரும் என்பதையும் ஞாபகமூட்ட விரும்புகிறோம். 

5 கருத்துரைகள்:

Islam taught us how to make decisions, in family level and as community level. This Masoora method not been used when a decision making process. This is the big calamity our society.
Even our beloved prophet SAWS do musawarah ( mash pots) even though he get allah revelation (wahi).
Our society even all levels, we have used to take under them carpet decisions.
This must be the hot topic in Jumna Bayans to educate the society and give warnings to not to adhere the Islamic teaching.

இவர்களுக்கு சூடு,சாேறன,எதுவுமே இல்லை. பணத்தின் மீது குறியாக இருக்கின்றனர்.
இவர்கள் குர்ஆன்,ஹதிஸ் வழி நடந்தது இருந்தாள் பிற கட்சிகளுக்கு முன்மாதிரியாக இருந்திருக்கலாம்.

இலங்கை 8% முஸ்லீம்களின் அரசியல் அவலம் முஸ்லிம் அரசியலின் தோற்றமே.


@ Mannar Muslim correctly said bro.muslims should reject this Muslim parties ! Those parties are the sole reason for other racist parties to evolve.

மு கா வும் 10 ட 11 அவ்வளதான்!
அங்கே குர்ஆன் தான் யாப்பு!
ஆனால் குடிவாய் அபேட்சகன்!
அங்கே பொம்பில பொருக்கி அபேட்சகன்
பிரதேஷவாதம் பதவிப் போராட்டம் காட்டிக்கொடுப்பு, கூட்டியும் கொடுப்பு?

புற்றுநோய் முழுசா பரவுனால் சாகவிடுங்கள் அந்த கட்சியை!

மாற்று அரசியல் பலத்திற்காய் போடப்பட்ட வெற்று விளம்பரங்கள்!
கோஷங்கள் மாறலாம் கோமாளிகள் மாறவில்லை!

உறவுகளே! காட்டிக கொடுக்கும் தேவையான போது பக்கவாதம்பிடித்த இவர்களை தூக்கி எரியுங்கள்! யார் வேளைசெய்வான் என பார்த்து இனி பா ம அனுப்புவோம்

Post a Comment