Header Ads



உரிமை தேடி..!



சேற்றில் சிக்குண்டு
வெயிலில் காய்ந்து 
மழையில் கழுவுண்டு
சேர்த்தோம் எங்கள்
கட்சிக்கு வாக்கு!

உறக்கம் துறந்தோம்
உணவை மறந்தோம்
உதிரம் வடித்தோம்
கல்லெறியுடன்
பொல்லடியும் சுமந்தோம்
கட்சியை வளர்த்தோம்!

உரிமை ஒன்றே கோசம் 
உணர்வை உயிர்ப்பித்தோம்
கைம்பெண் உள்ளங்களிலும்
நிலைபெற்றது எங்கள் கட்சி 
வளர்ச்சியின் ஆர்முடுகல் கண்டு
வல்லாரும் ஒட்டிக்கொண்டனர்!

வல்லார் பெட்டிப்பாம்பாக...
மகுடி கொண்டவன் 
நெஞ்சு நிமிர்த்தி 
தலைக்கனம் கொண்டவனாக....
காலோனுக்கு பொறுக்கவில்லை
அழைத்துக்கொண்டான் 
போதும் உன் ஆயுள் என்று!

மகுடிகள் பல்கிப் பெருக
பெட்டிப்பாம்புகள் கண்விழித்து
மகுடிகளுக்கு ஏற்றாற்போலாட
கௌரவர்கள் கௌரவமாக 
ஒதுங்கியும் ஒதுக்கப்பட்டும் 
ஓரங்கட்டப்பட்டும் புறந்தள்ளப்பட
வளர்ச்சிவேகம் கண்டது அமர்முடுகலை!

மகுடிகள் ஆட நினைக்க
பாம்புகள் பேராசை கொண்டு
மகுடியும் நாமே ...
பாம்பும் நாமே....
கோசத்துடன் சென்றது தனியாக!

உணர்வுகள் விலைபோக
உரிமைக்கோசம் உயிரிழக்க
பிரதேசவாதம் உயிர்கொண்டு
தன்னுரிமை முன்னனி கொள்ள
நோயுற்று நொருங்கியது
உரிமைக்கட்சி!

மகுடிகள் தலைமை லேபல்களுடன்
பாம்புகள் "கொந்தராத்து" பொந்துகளுக்குள்
கட்சியை வளர்த்தவன் கண்ணீரை உருக்கி
ஊன்றிக்கொண்டிருக்கிறான்
உணர்வை இழக்காமல் 
உரிமையை தேடி!

Dr Abdul Razak AC 

1 comment:

  1. Of course your truly exposed the bitter truth but as an educated professional, something would be added with this poem. Because all of us express what happened and what should not happened but we failed to discuss what is the best solution in order to counter the issues we face today.

    ReplyDelete

Powered by Blogger.