Header Ads



எனக்கு தெரிகிறது, எனக்கு புரிகின்றது, என்னால் எச்சரிக்கை விடுக்க முடியும் - ஜெனரல் கமால் குணரட்ன

நாட்டின் பாதுகாப்புப் புலனாய்வுப் பிரிவு முழுமையாக ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாக மேஜர் ஜெனரல் கமால் குணரட்ன குற்றம் சுமத்தியுள்ளார்.

பொரலஸ்கமுவவில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் கூறுகையில்…

நாடு தற்போது செல்லும் நிலைமை திருப்திகரமானதாக அமையவில்லை.நான் ஓர் படைவீரன், அனுபவம் நிறைந்த படை அதிகாரியாக செயற்பட்டிருக்கின்றேன்.

எனக்கு தெரிகிறது, எனக்கு புரிகின்றது.என்னால் எச்சரிக்கை விடுக்க முடியும். எமது புலனாய்வுப் பிரிவினை அப்போது நாம் வலுவான ஓர் நிலைமைக்கு கொண்டு வந்தோம்.

இதற்கு சிறந்த உதாரணமாக மலேசியாவில் மறைந்திருந்த குமரன் பத்மநாதன் எனப்படும் கே.பி.யை இரகசியமாக கைது செய்து நாட்டுக்குள் கொண்டு வந்ததனை சுட்டிக்காட்ட முடியும்.

இவ்வாறான புலனாய்வு நடவடிக்கைகளை உலகின் சில நாடுகளின் புலனாய்வுப் பிரிவுகளே மேற்கொண்டுள்ளன.

இவ்வாறான புலனாய்வுப் பிரிவு நடவடிக்கைகள் முழுமையாக ஸ்தம்பிதம் அடைந்துள்ளன.

இன்று புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் உத்தியோகத்தர்கள் சங்காரம் செய்யப்படுகின்றனர்.

நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் சேவையாற்றிய எம்மை சிறையில் அடைக்கின்றார்கள் என புலனாய்வுப் பிரிவினர் புலம்புகின்றனர்.

தருவதனை உண்டு அமைதியாக இருக்க புலனாய்வுப் பிரிவினர் பழகிக் கொண்டுள்ளனர் என மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.