Header Ads



'தம்­புள்ளை பள்­ளி­வாசல் பிரச்­சினை, இன முரண்­பா­டு­க­ளுக்கு கார­ண­மாக அமையும்'

-விடிவெள்ளி-

தம்­புள்ளை பள்­ளி­வாசல் பிரச்­சினை தீர்க்­கப்­ப­டாது தொடர்ந்தும் இழுத்­த­டிக்­கப்­பட்டால் அது இன முரண்­பா­டு­க­ளுக்கு கார­ண­மாக அமையும். அதனால் இரு தரப்­பி­னரும் இப்­பி­ரச்­சி­னையை சமா­தா­ன­மாக தீர்த்­துக்­கொள்ள வேண்டும்.

இதற்கு அஸ்­கி­ரிய பீட மகா­நா­யக்க தேரரின் ஆலோ­ச­னை­களும் பெற்­றுக்­கொள்­ளப்­பட வேண்டும். பிரச்­சி­னையை சமா­தா­ன­மாகத் தீர்த்துக் கொள்ள எனது முழு ஆத­ர­வி­னையும் வழங்­குவேன் என தம்­புள்ளை விகாரா தி­பதி ஸ்ரீ ராஹுல தேரர் தெரி­வித்தார்.

தம்­புள்ளை பள்­ளி­வா­ச­லுக்கு காணி வழங்­கப்­ப­டக்­கூ­டாது என்று தம்­புள்­ளையில் பெரும்­பான்மை இனத்­த­வர்­களால் கையொப்­பங்கள் சேக­ரிக்­கப்­பட்டு வரு­வது தொடர்பில் வின­வி­ய­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில்;
‘தம்­புள்ளை பள்­ளி­வாசல் பிரச்­சினை தீர்க்­கப்­ப­டா­ததால் புனித பூமி அபி­வி­ருத்தித் திட்­டங்­களும் தடைப்­பட்­டுள்­ளன. எனவே பள்­ளி­வாசல் அவ்­வி­டத்­தி­லி­ருந்து அகற்­றப்­பட வேண்டும்.

இதே­வேளை பள்­ளி­வா­சலை அவ்­வி­டத்­தி­லி­ருந்து அகற்றிக் கொள்­வ­தற்கு பள்­ளி­வாசல் தரப்பும் இணக்கம் தெரி­வித்­துள்­ளது. நகர அபி­வி­ருத்தி அதி­கார சபைக்குப் பொறுப்­பா­க­வுள்ள அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க 20 பேர்ச் காணி வழங்­கு­வ­தற்கு இணக்கம் தெரி­வித்­துள்ளார்.

ஆனால் பள்­ளி­வாசல் தரப்பு 80 பேர்ச் காணியை வேண்டி நிற்­கி­றது. இப்­பி­ரச்­சி­னை­யையும் பேச்­சு­வார்த்­தைகள் மூலமே தீர்த்துக் கொள்ள முடியும்.

தம்­புள்­ளையில் பெரும்­பான்மை இனத்­த­வர்கள் ஏனைய சமூ­கத்­தி­ன­ருடன் சமா­தா­ன­மாக சகோ­தர மனப்­பான்­மை­யு­ட­னேயே வாழ விரும்­பு­கிறோம். இதனால் பிரச்­சி­னைகள் சமா­தா­ன­மாக கலந்­து­ரை­யா­டல்கள் மூலம் தீர்க்­கப்­பட வேண்டும். பள்­ளி­வாசல் நிர்­வாகம் இதற்­கான முன்­னெ­டுப்­பு­களை மேற்­கொள்ள வேண்டும் என வேண்­டுகோள் விடுக்­கிறேன் பிரச்­சி­னைகள் தொடர்ந்து நீடித்தால் அது புனித பூமி அபி­வி­ருத்­திக்குப் பாதிப்­பாக அமை­யலாம் என்றார்.

1 comment:

  1. பெரும் பான்மை எதுவரை

    ReplyDelete

Powered by Blogger.