March 21, 2017

ஜெனீவாவில் இலங்கை முஸ்லிம் பிரதிநிதிகள் - மகஜர்களை கையளிக்கவும் ஏற்பாடு


-விடிவெள்ளி-

ஜெனிவா மனித உரிமை பேர­வையின் 34 ஆவது கூட்டத் தொடர் இறுதிக் கட்­டத்தை அடைந்­துள்ள நிலையில்   முஸ்லிம் மக்கள் எதிர்­நோக்கும் பிரச்­சி­னை­களை  முன்­வைக்கும் நோக்கில்  வட மாகாண  முஸ்லிம் சிவில் சமூக ஒன்­றி­யத்தின் பிர­தி­நி­திகள்  ஜெனிவா சென்­றுள்­ளனர். 

வட மாகாண முஸ்லிம் சிவில் சமூ­கத்தின்   பிர­தி­நி­திகளான அப்துல் றமீஸ், அப்துல் காஸிம் ஆரிப் மற்றும் ஜென்­ஸிலா மஜீத் ஆகியோர்  ஜெனி­வாவில்  முகா­மிட்­டுள்­ளனர்.  

இதன்­போது இலங்­கையில் முஸ்லிம் மக்கள் எதிர்­கொள்ளும் பிரச்­சி­னைகள் தொடர்­பான  மகஜர் ஒன்­றையும் ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வைக்கு சமர்ப்­பிக்­க­வுள்­ளனர். 

குறிப்­பாக  இடம்­பெ­யர்ந்­துள்ள முஸ்­லிம்கள்  விரை­வாக மீள்­கு­டி­யேற்­றப்­ப­ட­வேண்டும் என்றும் புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்கும் செயற்­பா­டு­க­ளிலும்   அர­சியல் தீர்வை காணும்  நட­வ­டிக்­க­கை­க­ளிலும் முஸ்­லிம்­க­ளையும் ஒரு  தரப்­பாக உள்­ளீர்க்­க­வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தே இந்த மகஜர்  ஜெனி­வாவில்  முஸ்லிம் மக்­களின் சார்பில் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்­ளது.  

விசே­ட­மாக அர­சியல் தீர்வு முன்­வைக்­கப்­ப­டும்­போது மாகாண சபை­க­ளுக்­கான அதி­கா­ரங்­க­ளுடன் முஸ்லிம் மத, கலா­சார விட­யங்­களை உள்­ள­டக்கும் தனி­யான அதி­கார சபை அல்­லது அமைச்சு  உரு­வாக்­கப்­ப­ட­வேண்டும் என்றும்   வட மாகாண  முஸ்லிம் சிவில் சமூக ஒன்­றி­யத்தின் பிர­தி­நி­திகள்  குறிப்­பிட்­டனர்.  

இதே­வேளை, வடக்கு முஸ்லிம் மக்­களின் விவ­கா­ரங்­க­ளிலும் ஐக்­கிய நாடுகள் சபை கவனம் செலுத்­த­வேண்டும் என்ற கோரிக்­கை­யோடு வடக்கு முஸ்லிம் சிவில் சமூகப் பிர­தி­நி­திகள் ஜெனீவா ஐக்­கிய நாடு­களின் மன்றில் முக்­கி­ய­மான உயர்­மட்ட சந்­திப்­புக்­களை இன்­று­முதல் மேற்­கொள்­கின்­றார்கள்.

 ஐ.நா. மனித உரிமை பேர­வையின் ஆணை­யாளர் சயீத் அல்-­ஹுஸைன், சிறு­பான்­மை­யி­ன­ருக்­கான விஷேட அறிக்­கை­யாளர் ரீட்டா ஐஸக் மற்றும் பிரித்­தா­னியா அமெ­ரிக்கா, கனே­டிய தூது­வர்­க­ளையும் சந்­தித்து வடக்கு முஸ்­லிம்கள் எதிர்­நோக்கும் மனித உரிமை சார் பிரச்­சி­னைகள், சவால்கள் குறித்தும் அவர்கள் கலந்­து­ரை­யா­ட­வுள்­ளார்கள்.

வடக்கு முஸ்­லிம்கள் ஐ.நா. மனித உரிமை ஆணை­ய­கத்தின் தீர்­மா­னத்தை வர­வேற்­ப­தோடு, அதனை இலங்கை அர­சாங்கம் முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­ப­ட­வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்­துள்­ளார்கள். 

இலங்கை அர­சாங்கம் பொது­வாக சிறு­பான்மை சமூ­கங்­களின் விவ­கா­ரங்­களில் முற்­போக்­காக செயற்­ப­டு­வ­தற்கு ஆர்­வ­மற்­றி­ருக்­கின்­ற­மை­யி­னையும் அவர்கள் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளார்கள்  மேற்­ப­டி­தீர்­மா­னத்தில் வடக்கு முஸ்­லிம்கள் உள்­ள­டக்­கப்­ப­டு­வதை உறுதி செய்யும் அதே சந்­தர்ப்­பத்தில், அவர்­களை இது­வி­ட­யத்தில் அறி­வூட்­டு­வ­தற்குப் போது­மான நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்­துள்­ளார்கள்.

சர்­வ­தேச சமூ­கமும், இலங்கை அர­சாங்­கமும் வடக்­கிலே தமிழ் முஸ்லிம் மக்­க­ளுக்­கி­டை­யி­லான நல்­லி­ணக்­கத்தை உரு­வாக்கும் நோக்­குடன் விஷேட வேலைத்­திட்­ட­மொன்­றினை உட­ன­டி­யாக அமு­லாகும் வகையில் ஏற்­ப­டுத்த வேண்டும் என்றும் அதுவே வடக்கு முஸ்­லிம்­களின் பிரச்­சி­னை­க­ளுக்­கான அடிப்­ப­டைத்­தீர்வை ஏற்­ப­டுத்தும் சூழ்­நி­லையை வடக்கில் ஏற்­ப­டுத்தும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

மேற்படி தூதுக்குழுவினர் புலம்பெயர் தமிழ் அமைப்புகளையும், முஸ்லிம் அமைப்புகளையும் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளனர்.

கடந்த  பெப்ரவரி மாதம்  27 ஆம் திகதி ஆரம்பமான  ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின்  34 ஆவது கூட்டத் தொடர்   எதிர்வரும் 24 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

0 கருத்துரைகள்:

Post a Comment