Header Ads



வீசா இன்றி இலங்கையர்கள், கனடா செல்லலாம் என்பது "பச்சை பொய்"

வீசா இன்றி இலங்கையர்கள் கனடாவிற்கு செல்ல முடியும் என தெரிவித்து வெளியான செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகராலயம் மறுப்பு வெளியிட்டுள்ளது.

அத்துடன், இலங்கையர்கள் கனடாவுக்குள் பிரவேசிப்பது தொடர்பிலான சட்டங்களில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியான செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், வீசா நடைமுறையில் வழமையான நடைமுறைகளே பின்பற்றப்படுவதாக இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகராலயம் கூறியுள்ளது.

இதேவேளை, சுற்றுலா மற்றும் வர்த்தக நோக்கங்களுக்காக கனடா செல்லும் இலங்கையர்களுக்கு வீசா அனுமதி தேவையில்லை என சில சமூக வலையமைப்புக்கள் மூலம் தகவல் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையிலிருந்து கனடா செல்ல விரும்புபவர்கள் http://www.cic.gc.ca/english/visit/index.asp இந்த தளத்திற்கு சென்று சரியான தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 comment:

  1. ஆனால், உலகளாவிய இஸ்லாமிய கிலாபத் இயங்கும் ஒரு காலத்தில் எவரும் எங்கும் போகலாம் வரலாம்.

    ReplyDelete

Powered by Blogger.