Header Ads



மஹிந்த தரப்பும் ஜெனீவா செல்கிறது

புலிகள் மேற்கொண்டதாக கூறப்படும் போர்க்­குற்­றச்­சாட்­டுக்­களை ஜெனிவா மனித உரி­மைகள் சபை­யில் முன்­வைப்­ப­தற்கு மகிந்த தரப்பு தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த காலங்களில் யுத்தம் இடம்பெற்ற போது இலங்கை இரா­ணு­வத்­துக்கு எதி­ரான போர்க்­குற்­றச்­சாட்­டுக்­கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், இதனை முறியடிக்கும் நோக்கிலேயே மஹிந்த குழு இந்த தீர்மானத்தினை எடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.

அந்த வகையில் வருகின்ற 13ஆம் திகதி விடுதலைப்புலிகளுக்கு எதிராக குற்­றச்­சாட்­டுக்­கள் அடங்­கிய ஆவ­ணத்தை முன்­னாள் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ரியர் அட்­மி­ரல் சரத் வீர­சே­க­ர­வின் தலை­மை­யி­லான குழு­வொன்று ஜெனிவாவிற்கு கொண்டு செல்லவுள்ளது.

இந்த நிலையில் இவர்களை வழியனுப்பி வைக்கும் நிகழ்வானது கொழும்பு - தும்­புள்ள சந்­தி­யில் அமைந்­துள்ள கிராம விம­ல­ஜோதி தேரரின் அலு­வ­ல­கத்­தில் இடம்பெறவுள்ளது.

முன்­னாள் பாது­காப்பு செய­லா­ளர் கோத்­த­பாய ராஜபக்ச இவர்களை ஜெனிவாவிற்கு வழியனுப்பி வைக்­க­வுள்­ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

இதன் போது படை­யி­னர் போர்க் குற்­றங்­க­ளில் ஈடு­ப­ட­வில்லை என்று நிரூ­பிக்­கும் ஆதா­ரங்­க­ளும், புலி­கள் தான் போர்க்குற்­றங்­க­ளில் ஈடு­பட்­ட­னர் என்­ப­தற்­கான ஆதா­ரங்­க­ள் அடங்கிய போர்க்­குற்­றச்­சாட்டு அறிக்கையை, இந்த நிகழ்­வில் கலந்து கொள்­ள­வுள்ள முப்­ப­டை­க­ளின் முன்­னால் கையளிக்கப்படவுள்ளது.

அத்துடன் அறிக்கையானது ஆராய்ந்து முடிந்­த­வு­டன் அங்­கி­ருந்­த­வாறே சரத் வீர­சே­க­ர­வின் தலைமையிலான குழு­வினர் குறித்த அறிக்கையுடம் ஜெனிவா நோக்­கிப்புறப்­ப­டவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முகப்புக்கு செல்ல

1 comment:

  1. கோழிக் கள்ளனும் கூட நின்று உலாவுவதாம்,

    ReplyDelete

Powered by Blogger.