Header Ads



இலங்கை - இந்தோனேசியா சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்..!


இலங்கை மற்றும் இந்தோனேசியாவிற்கிடையில் சுதந்திர வர்த்தக ஒப்பந்தமொன்றை மேற்கொள்ளுவதற்கு இருநாட்டு தலைவர்களும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

இந்தோனேசிய தலைநகர் ஜகார்தாவில் இடம்பெற்ற, 20ஆவது இந்தியப் பெருங்கடல் கூட்டமைப்பு நாடுகளின், மாநாட்டில் பங்குபற்றிய நிலையிலேயே, குறித்த இருநாட்டு தலைவர்களுக்கிடையில் குறித்த சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகள்  தொடர்பாக கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

மேலும் இந்து சமுத்திரத்தை சேர்ந்த 21 நாடுகள் பங்கு பற்றிய இயோரா மாநாட்டில் சிறப்புரை ஆற்றிய ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன, இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடாவுடன் விசேட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.