Header Ads



இலங்கையில் 90 சதவீதமானோர் வாய் நோயினால் பாதிப்பு

90 சதவீதமானோர் ஏதோவொரு வகையிலான வாய் சம்பந்தப்பட்ட நோயுடன் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பல் வைத்தியர் சங்கத்தின் துணைச் செயலாளர் வைத்தியர் நிலந்த ரத்னாயக்க தெரிவித்தார். 

இது குறித்து அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், 

“சர்வதேச வாய்ச் சுகாதார தினம் நாளையாகும் (20) இம்முறை தொனிப்பொருள், ‘ஆரோக்கியமான வாழ்வுக்கு - வாய்ச் சுகாதாரத்தை முன்னெடுத்தல்’ என்பதாகும். அதிகளவு சீனியுடன் கூடிய உணவுகளை உட்கொள்ளல், முறையாக வாயை சுத்தம் செய்யாமை, வாய் சுகாதாரப் பாதிப்புக்கு காரணமாகும். மேலும், அதிகளவில் வெற்றிலை மெல்லுதல், புகைத்தல் ஆகியன வாய்ச்சுகாதாரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் விடயங்களாகும் . 

வாயுடன் தொடர்புபட்ட நோய்களுக்கு உள்ளானவர்கள்  பெருமளவில் இருப்பதை காணக்கூடியதாக உள்ளது. பாடசாலை மாணவர்களில் 65 சதவீதமானோர் வாய் சம்பந்தப்பட்ட நோய்க்கு உள்ளாகியுள்ளனர்.  95 சதவீதமானோர் பல் ஈறுகளில் தொடர்புட்ட நோய்களுக்கு உள்ளாகியிருப்பதாக அமைச்சின் புள்ளிவிவரங்களில் இருந்து தெரியவந்துள்ளது.  முரசு கரைதல், வாய்ப் புற்றுநோய் மற்றும் சொத்தைப் பல் போன்றவற்றினால் பாதிக்கப்பட்டோர் பெருமளவில் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது” என்றார்.

No comments

Powered by Blogger.