Header Ads



பள்ளிவாசலுக்கு எதிராக எதிர்ப்புக்கூட்டம் - 75 வீத­மான பௌத்த மாணவர்கள் பங்கேற்பு


தம்­புள்ளை புனித பூமிக்குள் முஸ்­லிம்­களின் பள்­ளி­வா­சலோ ஏனைய மதத்­த­வர்­களின் மதஸ்­த­லங்­களோ இருக்கக் கூடாது. அவற்றை உட­ன­டி­யாக அரசு அகற்­றிக்­கொள்ள வேண்டும் என்று வலி­யு­றுத்தி தம்­புள்­ளையில் நேற்று -19- எதிர்ப்புக் கூட்­ட­மொன்று நடத்­தப்­பட்­டது.

மகா­சேன பல­காய எனும் அமைப்பு ஏற்­பாடு செய்­தி­ருந்த இந்த எதிர்ப்புக் கூட்­டத்தில் சுமார் 20 பௌத்த குருமார் கலந்து கொண்­ட­துடன் 75 வீத­மானோர் பௌத்த சமயப் பாட­சா­லை­களைச் சேர்ந்த மாணவ, மாண­வி­க­ளா­வார்கள்.

தம்­புள்­ளையில் முஸ்­லிம்கள் அதி­க­மாக உழைத்து பணத்தை தமது ஊர்­க­ளுக்குக் கொண்டு செல்­கி­றார்கள். தம்­புள்­ளையில் இருக்கும் சிங்­க­ள­வர்கள் தாம் உழைக்கும் பணத்தில் மது அருந்தி வாழ்க்­கையைச் சீர­ழிக்­கி­றார்கள். இந்­நி­லையை மாற்­றி­ய­மைக்க நாம­னை­வரும் ஒன்­று­பட்டு செயற்­பட வேண்டும்.

நாட்டில் அமு­லி­லுள்ள தேவா­லகம் சட்­டத்தை அமுல்­ப­டுத்தி புனித பூமியில் இருக்கும் பள்­ளி­வா­சல்­க­ளையும் ஏனைய மதஸ்­த­லங்­க­ளையும் அகற்ற வேண்டும் என்று கூட்­டத்தில் கருத்து தெரி­விக்­கப்­பட்­டது.

இக்கூட்டம் தம்புள்ளை விகார சந்தியில் மக்கர தொரணவுக்கு அருகில் இடம்பெற்றது.

விடிவெள்ளி

No comments

Powered by Blogger.