Header Ads



5 கோடி ரூபா ஹெரோயினை கரைத்துஇ இறப்பர்களிடையே ஒட்டி கடத்தல் - கட்டுநாயக்காவில் ஒருவர் கைது

ஹெரோயின் போதைப் பொருளை கரைத்து  இறப்­பர்­க­ளி­டையே ஒட்டி விரிப்­புக்­களை செய்து  இறப்பர் விரிப்­புக்­களை கொண்­டு­வரும் போர்­வையில் 5 கிலோ­வுக்கும் மேற்­பட்ட ஹெரோ­யினை நாட்­டுக்குள் கடத்­தி வந்த பாகி­ஸ்தானிய பிரஜை ஒரு­வரை பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரி­வினர் கைது செய்­துள்­ளனர்.

இந்­நி­லையில் அவரை 7 நாள் தடுப்புக் காவலில் வைத்து விசா­ரணை செய்து வரு­வ­தாக பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரி­வினர் தெரி­விக்­கின்­றனர்.

இது தொடர்பில் மேலும் தெரிய வரு­வ­தா­வது,  நேற்று முன்­தினம் அதி­காலை கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்­துக்கு  வந்த கியூ. ஆர். 668 எனும் விமா­னத்தில் கத்­தா­ரி­லி­ருந்து பாகிஸ்தான் பிரஜை ஒருவர் வந்­துள்ளார்.

கத்தார் உள்­ளிட்ட மத்­திய கிழக்கு விமான நிலை­யங்­களை போதைப் பொருள் கடத்­த­லுக்கு சூட்­சு­ம­மாக பயன்­ப­டுத்­து­கின்­றமை தொடர்பில் போதைப் பொருள் தடுப்புப் பிரி­வினர் பல்­வேறு தக­வல்­களை  பெற்­றி­ருந்­தனர்.

இந்த நிலையில் கட்­டு­நா­யக்க விமான நிலைய போதைப் பொருள் தடுப்புப் பிரி­வினர், கத்­தா­ரி­லி­ருந்து வந்த பாகிஸ்தான் பிர­ஜையில் சந்­தேகம் கொண்டு அவ­ரது பயணப் பெட்­டியை சோதனை  செய்­துள்­ளனர்.  இதன் போதே அந்த பெட்­டியில் ஹெரோயின் கலந்து செய்­யப்­பட்ட இறப்பர் விரிப்­புக்கள் மூன்று இருப்­பதை பொலிஸார் கண்­ட­றிந்­தனர்.

ஹெரோ­யினை கரைத்து இரு இறப்பர் விரிப்­புக்­க­ளுக்கு நடுவே வைத்து ஒட்டி அவ்­விரு விரிப்­புக்­களும் ஒட்­டப்­ப­டு­கின்­றன. பின்னர் அந்த விரிப்­புக்கள் சந்­தையில் விற்­கப்­ப­டு­வ­துடன் போதைப் பொருள் பயன்­பாட்­டா­ளர்­களின் தேவைக்கு அமைய விரிப்­புக்கள் துண்டு துன்­டாக வெட்­டப்­பட்டு விற்­பனை செய்­யப்­ப­டு­கின்­றன.

குறித்த இறப்பர் விரிப்புத் துண்டை எரிப்­பதன் ஊடாக ஹெரோ­யினைப் பெற்று பயன்­ப­டுத்த முடி­யு­மாக இருக்கும் என்­ப­தையும் பொலிஸார் கண்­ட­றிந்­துள்­ளனர்.  

இத்­த­கைய முறையில் கடத்­தப்­படும் ஹெரோயின் போதைப் பொருளை கைப்­பற்றும் முதல் சந்­தர்ப்பம் இது­வென பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரி­வினர் சுட்­டிக்­காட்­டு­கின்­றனர். கைப்­பற்­றப்­பட்ட போதைப் பொருளின் பெறு­மதி 5 கோடி ரூபா என மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

சம்­பவம் தொடர்பில் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் பிர­தானி பிரதிப் பொலிஸ் மா அதிபர் கமல் சில்­வாவின் ஆலோ­ச­னைக்கு அமை­வாக மேல­திக விசா­ர­ணைகள் இடம்­பெ­று­கின்­றன.

சம்­பவம் தொடர்பில்  கைது செய்­யப்­பட்ட நபரை  நீர்­கொ­ழும்பு பதில் நீதவான்  கே.ஜி. குண­தாச முன்­னி­லையில் சந்­தேக நபர் ஆஜர் செய்யப்பட்டார்.  சந்தேக நபரை எதிர்வரும் 10 ஆம் திகதி வரை கொழும்பு போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவில் தடுத்து வைத்து  மேலதிக விசாரணை செய்ய நீதிவான் உத்தரவிட்டார்.
  

No comments

Powered by Blogger.